1/18/2016

நாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்துறை பேராசிரியருமான தலித் போராளி கே.ஏ .குணசேகரம் காலமானார்

 .

நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரம் உடல் நலக் குறைவால் இன்று புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

 சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அண்மையில் சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இன்று திடீரென இறந்தார் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். தலித் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது 'மனுசங்கடா' ஒலிநாடாவுக்கும் 'பலி ஆடுகள்' நாடகத்துக்கும் வடு நூலுக்கும் முக்கியமான இடம் உண்டு.

நாட்டுப்புற இசையை தமிழகமெங்கும் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர் கே ஏ ஜிஅவர்கள். கவிஞர் இன்குலாப்பின் "மனுசங்கடா.... நாங்க மனுசங்கடா"பாடலை மெட்டமைத்து பாடி உலகெங்கும் பரப்பியவர் குணசேகரம் அவர்கள்.தலித் மக்களின் எழிச்சி அரசியலில் அவர் ஒரு குறியீடாக வலம்வந்தார்.அன்னாருக்கு எமது தோழமை கலந்த ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகட்டும்.



.

0 commentaires :

Post a Comment