மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட “கோட்டைபூங்கா” 20.01.2016 புதன்கிழமை பொது மக்கள் பாவனைக்காக வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
முன்னால் அரசாங்க அதிபர் ஏ.கே.பத்மநாதன், மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநார் ஆகியோரையும்; கௌரவிக்கும் வகையிலும் “பிரின்ஸ்பாலம்” மற்றும் “AKநடைபாதை” என்பன உட்பட சிறுவர் மற்றும் பெரியோரும் பொழுதைக்களிக்க உதவும் வண்ணம் இப்பூங்கா அமைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
இந் நிர்மானப்பணிகள் அனைத்தும் மாநகர ஆணையாளரின் அறிவுறுத்தலின்படி வேறு எந்தவித உதவியுமின்றி மாநகர உத்தியோகத்தர்களாலும், ஊழியர்களாலும் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மாநகர ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநார், மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் பாஸ்கரன்,மாவட்டசெயலக பிரதம கணக்காளர் நேசராஜா மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பின் சாதனையாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

0 commentaires :
Post a Comment