அ.தேவதாசன்
தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
பிரான்ஸ்
12-01-2016
தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
பிரான்ஸ்
12-01-2016
“அறம்தான் ஆயுதங்களில் கூர்மையானது –
ஆனால் அது நேர்மையானது.
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அது யாரையும் தாக்காது.” : எம்.சி.சுப்பிரமணியம்

இலங்கை வடபுலத்து சாதிய கட்டமைப்பு என்பது இன்றுவரை அசைக்கமுடியாமலே இயங்கி வருகிறது. ஒரு சமூகத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது கல்வி, பொருளாதாரம் ஆகும்;. யாழ்ப்பாண வட புலத்தில் சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி என்பது மிக மிக தாமதமாகவே கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது இன்னும் பல ஆண்டுகள் பின் தங்கியே வருகிறது. ஆங்கிலேயர்கள் இலங்கையை தமது ஆட்சிக்குள் கொண்டுவந்த ஆரம்ப காலத்திலேயே உயர் சாதியினர் எனச் சொல்லப்படும் வெள்ளாளர்களுக்கு கல்வி வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிட்டன. ஆனால் அக்கல்வியை தாம் மட்டுமே சுவீகரித்துக் கொண்டனர். அதுமட்டுமன்றி சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு சென்று சேரவிடாமல் தடுப்பதற்கும் பெரும்பாடு பட்டனர். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை தமக்கு அடிமை குடிமைகளாக தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்வியை தடுத்தமைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனாலும் இவர்களது கபட நோக்கத்தையும் மீறி ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த சிலர் தாம் படித்தே தீரவேண்டும் தமது இனமக்கள் மீண்டெழ வேண்டுமென்ற இலட்சியத்துடன், பல அவமானங்களையும், கொடுமைகளையும், தீண்டாமைகளையும் எதிர்கொண்டு வெள்ளைக்கார பாதிரிமாரின் தயவில் படித்து முன்னேறினர். அதுமட்டுமன்றி தாம் சார்ந்த சமூகத்தினருக்கும் ஒளி விளக்காக திகழ்ந்தார்கள். அந்த வகையில் ஜோய் போல், எம்.சி.சுப்பிரமணியம் போன்ற இன்னும் சிலரை குறிப்பிடலாம்.
எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் 27-09-1917 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். ஐந்து வயதில் மெதடிஸ்த கல்லூரியில் தொடங்கிய கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் முடித்துக் கொண்டார். தாழ்த்தப்பட்ட சாதியினர் பாடசாலைக்கு செல்வதற்கே மறுக்கப்பட்ட காலத்தில் பல அவமானங்களை தாங்கியவாறும், பல எதிர்ப்புகளின் மத்தியிலும்;தான் தனது கல்வியை தொடர்ந்தார். உயர்சாதியினர் வாங்குகளில் இருந்து படித்தபோது, இவர் வெறும் தரையில் இருந்தே படிக்க முடிந்தது. இது போன்ற அவலமான நிலைமைகள் அவருக்குள்ளேயே சாதியம் மீதான கோபத்தையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்படும் கல்வி உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற ஆவேசத்தையும் தூண்டிவிட்டது. இதனால்தான் அவர் படித்து முடித்து அரச உத்தியோகம் கிடைக்கப்பெற்றும் அவைகளை தூக்கி எறிந்துவிட்டு முழுநேர சமூகவிடுதலைப் போராளியாக தன்னை உருவாக்கிக் கொண்டார்.
1944 இல் தலித் குடும்பத்தைத் சேர்ந்த பெண்ணின் இறந்த உடலை தகனம் செய்வதற்காக
வில்லூண்டி மயானத்தில் எடுத்து சென்று எரிக்க முற்பட்டபோது அதை பொறுக்காத உயர் சாதியினர் துப்பாக்கிச் சூடு செய்தனர். இதன்காரணமாக முதலி சின்னத்தம்பி எனும் தலித் கொல்லப்பட்டார். இதற்கெதிரான போராட்டத்தில் முக்கிய பங்காளராக களம் இறங்கிய எம்.சி. தொடர்ந்து சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் அனைத்திலும் பங்கு கொண்டு பல செயற்திட்டங்களை உருவாக்கினார்.
யாழ்ப்பாணத்தில் “சன்மார்க்க வாலிபர் சங்கம்” எனும் அமைப்பை உருவாக்கி அதனூடாக பல துடிப்புள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து பல போராட்டங்களை முன்னெடுத்தார்.
சாதியக் கொடுமையை உடைத்தெறிய சரியான பாதை கார்ல் மார்க்ஸின் தத்துவமே என்பதை அறிந்துகொண்ட எம்.சி இடது சாரியக் கருத்துடைய பொன்;.கந்தையா, வைத்திலிங்கம், கார்திகேசன் போன்றோரோடு நட்பை ஏற்படுத்திக்கொண்டார்.
சன்மார்க்க வாலிபர் சங்கம் இயங்கி வந்த காலத்திலேயே வள்ளுவர் சபை, ஒடுக்கப்பட்ட ஊழியர் சங்கம் போன்ற அமைப்புக்களும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக இயங்கி வந்தன. இவ் அமைப்புக்களில் யோய் போல், இராசேந்திரனார், சூரனார் போன்றோர் முனைப்புடன் செயற்பட்டு வந்தனர். சாதிய கொடூரத்தை தோற்கடிக்க தாம் ஒன்றுசேர வேண்டிய அவசியத்தை உணர்ந்து 1942 இல் யோய் போல் தலைமையில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப்பை உருவாக்கினர்.
இவ்வமைப்பு கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்தது. எம்.சி. அவர்களின் தலைமை திறனையும், போராட்ட குணாம்சத்தையும் தெரிந்து கொண்ட மகாசபையினர் 1952 இல் மகாசபையின் தலைவர் பொறுப்பை வழங்கினர்.
இவர்களது தொடர்ச்சியான போராட்டத்தின் பயனாக 1956 இல் நல்லூர் கந்தசாமி கோயில் முதன் முதலாக ஒடுக்கப்பட்ட சாதியினர் உள்ளே சென்று வணங்குவதற்கு திறந்து விடப்பட்டது. கன்பொல்லை, கரவெட்டி மக்கள் மீதான உயர்சாதியினரின் தொடர்ச்சியான கொடுமைகளை அரசுக்கு உணர்த்தும் முகமாக சோல்பரி பிரபுவை தொடர்புகொள்ள எம்.சி. அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு அப்போது பருத்தித்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் பல முட்டுக்கட்டைகளைப் போட்டு தடுத்த வண்ணமே இருந்தார். அதையும் மீறி எம்.சி. அவர்கள் தனது கைப்பட சோல்பரி பிரபு அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு அமைய சோல்பரி பிரபு நேரடியாக வந்து கன்பொல்லை கரவெட்டி கிராமங்களை பார்வையிட்டதுடன் படமும் பிடித்து சென்றனர். இதனால் கோபமுற்ற மேல்சாதியினர் அக்கிராமங்களின் குடிசைகளை தீக்கிரையாக்கி அம்மக்களை அகதிகளாக்கி அலையவிட்டனர். எம்.சி. அவர்களையும் தாக்கி அழிப்பதற்கான திட்டங்களை தீட்டினர். எனினும் அக்காரியத்தை அவர்களால் நிறைவேற்றமுடியவில்லை.
எம்.சி. அவர்களின் தலைமையில் மகாசபை ஆரம்பித்து வைத்த சமூக விடுதலைப் போராட்டம் மேல்சாதியினருக்கு மட்டுமின்றி தமிழ் அரசியல் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்வோருக்கும் பெரும் தாக்கத்தை யும் பின்னடைவையும் ஏற்படுத்தியது என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் அங்கத்தினர்களாகவும் போராளிகளாகவும் செயற்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இடதுசாரியக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். இந்நிலையில் 1960 இல் இடது சாரியக்கருத்தாளர்களில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ரசிய சார்பு, சீன சார்பு என
பிரியும் நிலை ஏற்பட்டது. மகாசபையில் இருந்து செயற்பட்ட டானியல், எஸ்.ரி.நாகரெத்தினம் போன்ற பலர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் இணைந்து ‘அடித்தால் திருப்பி அடிப்போம்’ எனும் கருத்தியலோடு போராட முற்பட்டனர். இவ்விரண்டு அமைப்புகளின் போராட்ட முறை வேறுபடினும் சாதிய ஒழிப்பு கொள்கையில் ஒரு வண்டிலில் பூட்டிய இரு குதிரைகள் போல போரிட்டனர்.
கல்வி மறுக்கப்பட்டிருந்த வட பகுதி தலித் மக்களுக்கு 1956 இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்கா தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் தொடர்ச்சியாக மகாசபை
விடுத்த கோரிக்கையின் பயனாக 15 பதினைந்து பாடசாலைகள் வடபகுதி எங்கும் உருவாக்கப்பட்டது.

1 – குட்டிய புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை – கோப்பாய்
2 – சண்டிலிப்பாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
3 – கட்டுவன் புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
4 – அச்சுவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
5 – சுதுமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
6 – இமையாணன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை – பருத்தித்துறை.
7 – புலோலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
8 – மட்டுவில் தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
9 – வசந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை -காங்கேசன்துறை.
10- மந்துவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
11- சரசாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
12- கைதடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
13- வரணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
14- வெள்ளம் பொக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை – சாவகச்சேரி
15- பொன் கந்தையா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை – மாணிப்பாய்.மேற்படி பாடசாலைகளில் கற்பித்தவர்களும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அதிலும் யாரும் அரசால் நியமிக்கப்படாத நிலையில் சம்பளம் பெறாமல் தலித் மக்களின் மேன்மை கருதி இலவசமாக
தொண்டாற்றினர். பின்னாளில் மகாசபையின் தொடர்ச்சியான கோரிக்கைக்கிணங்க அரச நியமனம் பெற்ற ஆசிரியர்களாயினர். இப்பாடசாலைகள் பல ஆரம்பிக்கபட்ட காலத்தில் உயர் சாதியினரால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றது.

முதலியார்களும், விதானைமார்களும் உயர்சாதியிலேயே நியமிக்கப்பட்டிருந்தமையால் தலித்துக்கள் அவர்களது வீடுகளுக்குள் செல்லமுடியாமல் தமது அரச காரியங்களை செய்வதற்கு பெரும் வேதனைகளையும் இழப்புகளையும் சந்தித்த வேளையில் மகாசபை அரசாங்கத்தில் கோரிக்கை வைத்ததன் காரணமாக வட பகுதியில் பல கிராமங்களில் சமாதான நீதிவான் (ஜே.பி) பதவிகள் பல தலித்துக்களுக்கு வழங்கப்பட்டன. இதன் காரணமாக தங்கள் அலுவல்களை கூச்சமின்றி தேக்கமின்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது. இப்படி தலித்துக்கள் வாழ்வின் மேம்பாட்டுக்காக அயராது உழைத்தவர்களில் முக்கியமானவர் எம்.சி.ஆகும். இவரது அயராத உழைப்பையும் தியாகம் பொருந்திய வாழ்க்கையையும் கவனத்தில் கொண்ட மக்கள் அவர் தனது பணியை மேலும் ஊக்குவிக்குமுகமாகவும் தமது அன்பை வெளிப்படுத்தவும் தலித் மக்களால் நிதி சேகரிக்கப்பட்டு ஓர் அழகான கார் வண்டியை பரிசாக வழங்கினர்.
எம்.சி. அவர்களது தன்னலமற்ற சேவையினையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மக்கள் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தினையும் உணர்ந்த, 1970 இல் அமைந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிகளின் கூட்டு அரசு அவரை சிறுபான்மைத் தமிழர்களின் சார்பில் நியமன பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தனர். இத்தெரிவே பின்னாளில் திரு.இராஜலிங்கம் போன்ற தலித் மக்களின் பிரதிநிதிகளுக்கு தமது கட்சியில் வேட்பாளர் வாய்ப்புகளை கொடுத்து பாராளுமன்றம் அனுப்பவேண்டிய நிர்ப்பந்தத்தினை தமிழரசுக் கட்சியினருக்கு ஏற்படுத்தியது.
இவர் பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராக இருந்த காலத்தில பல நூறு தலித் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்ததுடன், ஆயிரக்கணக்கானவர்களுக்கு கல்வி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். 1956 இல் கொண்டு வரப்பட்ட ‘சமூக குறைபாடுகள் ஒழிப்புச்சட்டம்’ சரியான முறையில் இயற்றப்படாமையால் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 1974 இல் மேற்படி சமூக குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.
1974 இல் எம்.சி. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் உடுப்பிட்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு திரும்புகையில் “எளிய சாதி” காரில் செல்வதா என்ற எரிச்சல் காரணமாக அவர் சென்ற வாகனத்திற்கு உயர் சாதியினரால் கைக்குண்டு வீசப்பட்டது. அதில் எம்.சி. யோடு சேர்ந்து பயணித்த அன்ரனி, வைத்திலிங்கம், டொமினிக்ஜீவா ஆகியோர் காயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினர்.
தலித்திலக்கிய முன்னோடி டானியல் அவர்கள் மரணித்தபோது அவரது நினைவாக ஈழநாடு வாரமலரில் (20-04-1986) எம்.சி. அவர்கள் கீழ்வரும் கவிதையை எழுதியிருந்தார். அதுவே எம்.சி. இன் இறுதிக்கவிதையாகவும் இருந்தது.அடிமை விலங்கறுப்போம் – அதில்
ஆயுதங்கள் செய்திடுவோம்.
கொடுமை மிக மலர்ந்த இக்
குவியத்தை மாற்றிடுவோம்.அவர் தன்வாழ் நாளில் தலித் மக்களின் மீட்சிக்காக பல சாதனைகளை நடத்தி முடித்தார். 12-01-1989 இல் சுகயீனம் காரணமாக இம்மண்ணை விட்டு பிரிந்தாலும், எங்கள் செயலோடும், சிந்தனையோடும் என்றும் வாழ்கிறார். எம்.சியும் அவரோடு இணைந்து உழைத்த போராளிகளும் ஏற்றி வைத்த ஒளியில்தான் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று உலகத்தை பார்க்கிறோம். ஆனாலும் இன்னும் இம்மக்கள் பூரணத்துவமான
மேம்பாட்டை பெற்றுக்கொள்ளவில்லை. சாதியம் யுத்த காலங்களில் துப்பாக்கி நிழலில் மறைந்திருந்ததே தவிர அது அழிந்து விடவில்லை. இன்னும் சாதிய ஒடுக்குமுறையும் தீண்டாமையும் புதுப்புது வடிவங்களோடு தமிழ் தேசியம் எனும் காப்பரணின் துணையோடு வாழ்ந்துகொண்டே இருக்கிறது. இவைகளை உடைத்தெறிய எம்.சி சுப்பிரமணியமும், டானியலும், எஸ்.ரி.நாகரெத்தினமும் எம்மிடமிருந்து மீண்டும் மீண்டும் தோன்ற வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர்களை மறந்து விடாமல் என்றென்றும் அவர்களை நினைவில் கொள்வோம்.

0 commentaires :
Post a Comment