கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம், பழவிளை, ஞயுறான்விளை மற்றும் கோழிவிளை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியை சார்ந்த இலங்கை அகதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் விதம் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான துணிமணிகள், போர்வைகள் மற்றும் 13,370 ரூபாய் காசோலை ஆகியவற்றை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரண பொது மையத்தில் இன்று வழங்கினர்.
தமிழகத்தில் அகதிகளாய் வாழ்ந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்த இலங்கை அகதிகளை அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.
0 commentaires :
Post a Comment