12/08/2015

டேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்தர்களின் ஜனநாயக வேடத்துக்கான வியாபார பொருளானதா? *மன்னிப்புகேட்டு மனம் திறக்கிறார் ஏற்பாட்டாளர்-வரதன் கஸ்ட்ரோ

டேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்தர்களின் ஜனநாயக வேடத்துக்கான வியாபார பொருளானதா? *மன்னிப்புகேட்டு மனம் திறக்கிறார் ஏற்பாட்டாளர்-வரதன் கஸ்ட்ரோ
(கீழுள்ள செய்தி  கூட்ட ஏற்பாட்டாளர் வரதன் அவர்களின் முகனூல் செய்தியாகும் இதில் உண்மைகள் இணைய தளத்துக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் *உண்மைகள் -ஆசிரியர்)

Varathan Pasupathyபாரிசில் 06/12/2015 நடந்த காந்தீயம் அமைப்பின் டேவிட் ஐயாவின் கூட்டம் தொடர்பாக ப.வரதன்(காஸ்ரோ) ஆகிய நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நானும் கூட்ட ஏற்பாட்டின் ஒருவன் என்பதால் இந்த மன்னிப்பை கோருகின்றேன். டேவிட் ஐயா இந்தியாவில் வைத்து பிளட்டின் கொலை  வெறிக்கு மயிரிழையில் உயிர்தப்பியவர்.  அதன் பின் அவரின்  தோழன் காந்தியத்துடன் சேவையாற்றிய சந்ததியார் என்ற உயிர் நண்பன் புளட் உள்முரண்பாடு காரணமாக கொல்லப்பட்டார். இந்த  கொலைக்கு காரணமானது  கொலைகார புளட் ஆகும். 

இந்த டேவிட் ஐயாவின் கூட்டத்திலும் அந்த அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர்களின் ஊடுருவல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை இந்த கூட்டம் நிரூபித்துள்ளது. நீலக்கண்ணீர் வடிப்பதன் ஊடாகவும். டேவிட் ஐயாவை முன் வைத்து கடந்த  காலத்தை மறைப்பதனூடாகவும்  தாங்களை  ஜனநாயக வாதிகள் என்று காட்ட முற்ப்பட்ட  இந்த பிழைப்புவாதிகள் என்றும் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் ஆகும் .  என்றோ ஒருநாள் தன்வினை தன்னை சுடும். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவன் என்ற வகையில் மீண்டும் மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் நடு நிலை என்று கூறிக்கொண்டு கடைசியில் என்னை நம்பவைத்து பாவித்த விதம் எனக்கு மன உளைச்சலை  தருகின்றது .நேர்த்தியான அந்த டேவீட் ஐயா என்ற தன்னிகரில்லா பொதுமனிதனுக்கு என் அஞ்சலி என் இதயத்தில் உண்டு ....ப.வரதன் ( காஸ்ரோ )

நன்றி முகனூல் 
Varathan Pasupathy

0 commentaires :

Post a Comment