12/04/2015

மோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மாட்டிக் கொண்ட பி.ஐ.பி.

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட  வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
அவர் ஹெலிகாப்டரில் இருந்து சென்னை நகரைப்  பார்வையிட்டது தொடர்பான புகைப்படத்தை இந்திய பத்திரிக்கை தகவல் மையம் (பி.ஐ.பி.) வெளியிட்டது.
அந்த புகைப்படத்தை போட்டோஷாப்பில் போட்டு மாற்றி, பிரதமர் மோடி ஹெலிகாப்டரிலிருந்து விமானத்தில் இருந்து நேரடியாக சென்னையைப் பார்ப்பது போலவும், புகைப்படத்தில் மிகத் தெளிவாகக் கட்டடங்கள் தெரிவதுபோலவும் மாற்றி அதனை பிஐபி டிவிட்டரில் போட்டது
சும்மாவே பின்னி பெடலெடுக்கும் இணையதள வாசகர்கள் கண்ணில் இது பட, வேறென்ன இந்திய பத்திரிக்கை தகவல் மையத்தை வருத்தெடுத்து விட்டனர்.
ஒரு சில மணி நேரங்களில் அந்த புகைப்படத்தை நக்கலடித்தும், கிண்டலடித்தும் பதிவுகள் குவிய.. உடனடியாக தனது போட்டோஷாப் புகைப்படத்தை நீக்கிவிட்டு, உண்மையான புகைப்படத்தை பதிவு செய்தது பிஐபி.
இதுதொடர்பாக இந்திய பத்திரிக்கை அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், பிரதமர் சென்னை பயணம் தொடர்பாக ஏழு புகைப்படங்களை வெளியிட்டோம். அதில் ஒரு புகைப்படத்தில் இரு புகைப்படங்கள் இணைத்து வெளியிடப்பட்டன. அது போட்டோ ஷாப்பிங் முறையில் மாற்றப்பட்டுள்ளதாக பலர் கூறியதையடுத்து அந்த புகைப்படம் நீக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
பி.ஐ.பி. அந்த புகைப்படத்தை நீக்கிய போதும், சமூக வலைத்தளங்களில் அது தொடர்ந்து பகிரப்பட்டது.

0 commentaires :

Post a Comment