12/30/2015

ஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்னார்கள் கூட்டமைப்பினர் -நல்லாட்சி ஜனாதிபதி


Afficher l'image d'origineகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 13ஆம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி ஏ.எம்.றியாழ் முன்னிலையில் இன்று புதன்கிழமை இந்த மூவரையும்  ஆஜர்படுத்தியபோது, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 


 இந்த யுத்தத்தில் நமது நாட்டில் சுமார் இரண்டு  லட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்டிருப்பார்கள்.இதில் யுத்தத்தில் இடம்பெற்ற சண்டைகளில் அரச இராணுவம்,புலிகள் இருதரப்பிலும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பர்.அதேவேளை புலிகளாலும் இராணுவத்தாலும் கொல்லப்பட்ட பொதுமக்கள் ஒரு லட்சம் இருக்கலாம்.அதில்அப்பாவிசாமானியர்கள்,எழுத்தாளார்கள்,ஊடகவியலாளர்கள்,மதகுருக்கள்,அரசியல்வாதிகள் என்று பலதரப்பினரும் அடக்கம்.

இந்த அரசியல்வாதிகளிலும் கூட ஜனாதிபதிகள்,முக்கிய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நகரபிதாக்கள்,மேயர்கள்,மற்றும் தேர்தல்வேட்பாளர்கள் என்று   சுமார் இருநூறு  பேருக்குமேல் பட்டியலிடலாம்.

யுத்தத்தில் இழைக்கப்பட்ட யுத்த குற்றங்களுக்கு  சர்வதேச விசாரணையா? உள் நா ட்டு விசாரணையா? தேவை என்று சூடு பறந்த விவாதங்கள் எல்லாம் இப்போது முற்றுபெற்றுவிட்டன.காணியதிகாரமா போலிஸ் அதிகாரமா? அதிகார பரவலாக்கம் 13வது சட்டத்திருத்தத்துக்கு உட்பட்டதா? அதற்கு மேலான 13+ஆக இருக்குமா? என்றெல்லாம் மகிந்த காலஅரசாங்கத்துக்கு இருந்த நெருக்குவாரங்கள் எல்லாம் இப்போது பறந்தோடி விட்டது.நல்லாட்சி அரசாங்கம் வந்தவுடன் முப்பது வருட உள்நாட்டு யுத்தம் நடந்தநாடா நமது என்று எண்ணத்தோன்றுகின்றது. காரணம்  நல்லாட்சி அரசு வந்தவுடன் தமிழர்களுக்கு சொர்க்கம் கிடைத்துவிட்டதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வளர்த்த நாய் போல ரணிலின் காலடியில் தங்களுக்கு கிடைக்கும் எலும்பு துண்டுகளை நக்கிகொண்டு வலைசுருட்டிகொண்டு கிடக்கின்றனர். 

ஆனால் நாட்டில் ஒரே ஒரு அதிசயம் மட்டும் நடக்கின்றது.ஜோசேப் பரராச சிங்கம் என்று   ஒரு மாமனிதர் கொள்ளப்பட்டாராம், ஒரு கட்டை  பெடியன் சுட்டுவிட்டுபோனதை அல்போன்ஸ் மேரி பாதர் பார்த்தாராம்,  இலங்கையில் அப்போது பிள்ளையான் கையில் மட்டும்தான் ஆயுதம் இருந்ததாம்,பிள்ளையான் கட்டை என்பதால்  அவரது கொலைக்கு பிள்ளையான்தான்  பொறுப்பாம், ஆகவே அதை விசாரித்தே தீர வேண்டுமாம்.

எனவே ஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிப்பேன் என்று நல்லாட்சி ஜனாதிபதி பிள்ளையானை பிடித்து அடைத்துவிட்டதுடன் எல்லாவித யுத்தகுற்றங்களும் முடிந்துவிட்டன. மக்களுக்கு நீதி கிடைத்துவிட்டது. மக்கள் மட்டற்ற மகிழ்சியில் திகழ்கின்றார்கள்.நல்லாட்சி நன்றே மலர்ந்திருக்கின்றது.வாழ்க தமிழ் வளர்க தமிழீழம்.

மீன்பாடும் தேனாடான்  













0 commentaires :

Post a Comment