12/26/2015

ஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது



புலிகள் செய்யும் கொலைகளை மூன்று  விதமாக வகைப்படுத்தலாம்.
முதலாவது வகை  கொலைகள் புலிகளால் உரிமைகோரப்படும். அப்படி புலிகளால் உரிமை கோரப்பட்டு கொலைசெய்யபடுபவர்கள் சமூக விரோதிகள்இதிருடர்கள்இவிபச்சாரிகள்  என  ஊடகங்களால் சித்தரிக்கப்படுவர்.இவர்களில் பலர் சாதாரணா மனிதர்களாக இருப்பர். இக்கொலைகள் காலப்போக்கில் எல்லோராலும் மறக்கப்பட்டுவிடும் ஏனெனில் இவர்கள் சாமானியார்களாக இருப்பார்.இப்படியாக வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டாவது வகை  கொலைகள்  புலிகளால் உரிமை கோரப்படமாட்டாது.இவற்றில் அதிகமானவை அரசியல் கொலைகளாக இருப்பதால் அவை உரிமைகோரப்பட முடியாதவையாகும்.ஆனால் புலிகளின் ஊடகங்கள் அந்த கொலைக்கு  நியாயம் வழங்கி  அவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள்இ தமிழ் சமூகத்தின்  துரோகிகள் என்று செய்திகளை பரப்பும். இக்கொலைகள் காலம்தோறும் பேசப்பட்டாலும் வரலாறும் அவர்களை துரோகிகள் என்றே எழுதும். இந்தியபிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை இந்த வகையறாவில் உள்ளடங்கும்  இவ்வகை கொலைகளுக்கு முகம் கொடுக்க நேருபவர்களில் பலர்  புத்திஜீவிகள்இஅரசியல்வாதிகள்இஎழுத்தாளர்கள்இ மாற்றுகருத்துகொண்டோர்இ ஊடகவியலாளர்கள் என பலவகைபடுவர்.அமிர்தலிங்கம் தொடக்கம் ரஜினி திரணகம ஈறாக கிங்ஷிலி இராசநாயகம் வரை பலநூறு  பேர் இப்படித்தான் கொல்லப்பட்டனர்.இவர்கள் பற்றிய எந்த விசாரணைகளையும் தமிழ் தலைமைகளோ "தமிழ் தேசிய மனித உரிமைவாதி"களோ பத்திரிகைகளோ கோருவதில்லை.

புலிகளால் செய்யப்படும் மூன்றாவது  வகை கொலைகள் விசித்திரமானவை.அவற்றை ஒருபோதும் புலிகளால் உரிமைகோரப்படாதவை. முடிந்தவரை அக்கொலைகளை மாற்று இயக்கங்கள் மீதும் அரச படையினர் மீதும் புலிகள் போட்டுவிடுவர்.இக்கொலைகள் 
அனேகமாக உட்கட்சி மோதல்களை சமாளிக்க புலிகள் தமக்குள்ளேயே அல்லது தமது நெருங்கியவர்களுக்குள்ளேயே நிகழ்த்தும் கொலைகளாகும். புலிகளின் மூத்த உறுப்பினர் சங்கர்இ பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன்இஐரோப்பாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கஜன் புலிகளின் சர்வதேச நிதிபொறுப்பாளர் நாதன் போன்றோரின் இரட்டைகொலை போன்றவையெல்லாம் இவ்வகைப்பட்டதுதான்.அதாவது புலிகளே கொன்றாலும் அதனை மற்றயவர்களின் தலையில் போட்டுவிட்டு அவர்களுக்கு தாமே அஞ்சலி செலுத்துவது வழமை. இப்படித்தான் சங்கருக்கு கேர்ணல் பட்டமும் சிவநேசனுக்கு மாமனிதர் பட்டமும் வழங்கப்பட்டன.

இந்த வகையில் ஜோசேப் பரராச சிங்கம் கொலை   மூன்றாவது  வகை கொலைகளுக்குள் அடங்க கூடியது.புலிகள் இந்தகொலையை புலிகள் புரிந்திருக்க முடியாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.ஜோசேப் பரராச சிங்கம் முன்பொருதடவை பொட்டம்மானால் நேரடியாகவே எச்சரிக்கப்பட்டிருந்தவர் என்பது முக்கியமானது.அக்கொலையை தேவாலயத்துக்குள் நிறைவேற்ற வேண்டியிருந்தமையால் பாதிரிமாருக்கு பதில் சொல்ல முடியாமல் அக்கொலையை புலிகள் மறுதலித்திருக்கலாம்.உடனடியாக  ஜோசேப் பரராச சிங்கத்துக்கு மாவீரர் பட்டம் கொடுத்து நிலைமையை திசை திருப்பியிருக்கலாம்.

அதேவேளை ஜோசேப் பரராசசிங்கம் கொலை செய்யப்பட்ட இடம் மட்டகளப்பு நகரம் என்பதும் அது உயர் பாதுகாப்பு வலயத்துள் உள்ள இடம் என்பதுமே அக்கொலை அரச தரப்பினரால் அல்லது அரசசோடு சேர்ந்தியங்கிய ஆயுத குழுக்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுவதற்கான முக்கிய காரணம் ஆகும்.

ஆனால் இந்த கூற்று அடிப்படையற்றதொன்றாகும்.ஏனெனில் புலிகள் செய்த பல பகிரங்கமான தாக்குதல்களும் கொலைகளும்  உயர் பாதுகாப்பு வலையங்களுக்குள்ளேயே செய்யப்பட்டதாகும்.இலங்கைஇஇந்திய  ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வலையங்களுக்குள்ளேயே புகுந்து பிரேமதாசவையும் ராஜீவ் காந்தியையும்  கொல்ல முடியுமென்றால்இ பாதுகாப்பு அமைச்சர்கள் இருவரைஇ எத்தனையோ அரசியல் வாதிகளை  கொழும்பின் அதி உச்ச உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் நுழைந்து கொலை செய்ய  முடியும் என்றால்இ மட்டகளப்பு  உயர் பாதுகாப்பு வலயம் அவர்களுக்கு ஒன்றுமேயில்லை. 

 புலிகளின் பிளவுக்குள் புகுந்து விளையாடி தனது பதவிக்காய் குறிவைத்து இயங்கியவர் ஜோசேப் பரராசசிங்கம் ஆகும். பிளவுக்கு பின்னரும் வன்னிபுலிகளுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுகொண்டு இருந்த இவரை கருணா எப்படி தேர்தலுக்கு அனுமதித்தார்? தேர்தல் முடிந்த பின்னரும்  சுமார் ஒருவருட காலத்துக்கு  இவர் எப்படி  பாலுக்கும் காவல்  பூனைக்கும் தோழனாக நடித்துக்கொண்டிருந்தார்? கிழக்கு புலிகளுடன் ரகசிய உறவுகொண்டு தனது உயிரை   பாதுகாத்துக்கொண்டு இருந்தமை எப்படி பொட்டம்மானால் அறிய முடியாதிருந்திருக்கும்? என்கின்ற கேள்விகள் பல உண்டு. எனவே ஜோசேப் பரராச சிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்தவிதமான  உத்தரவாதமும் கிடையாது.

அரசியல் ஆய்வாளர்ழூ தேவகுமாரன் 




0 commentaires :

Post a Comment