வெனிசுவேலாவில் நடந்து முடிந்த தேர்தலில் அந்நாட்டு எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அந்நாட்டு பொருளாதாரத்தை சோஷலிச அரசாங்கம் கையாண்ட விதம் தான் இந்த தேர்தலில் முக்கிய விவகாரமாக இருந்தது.
பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த சோஷலிச அரசாங்கம், வெறும் 46 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியோ குறைந்தது 99 இடங்களை வென்றுள்ளது.
இந்த அறிவிப்பு வந்ததையடுத்து தலைநகர் கராகஸில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான மாவட்டங்களில் பட்டாசு சத்தங்கள் கேட்கத் தொடங்கின.
ஆளும் சோஷலிச அரசாங்கத்தின் தோல்விகளால் வெனிசுவேலா மக்கள் விரக்தியடைந்திருப்பதாகவும், அவர்களுக்கு மாற்றம் தேவைப்பட்டது என்றும் எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.
இது ஒரு கடினமான நாள் என்றாலும் இந்த முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக அதிபர் நிகோலஸ் மடுரோ தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment