புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து மூன்றாவது முறையாக மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும் பொங்கல் விழா-2016” எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரில் இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இவ்விழாவின்போது சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின்போது இலங்கையின் கிழக்கு வாழ் மக்கள் சுவிஸ் நாட்டில் ஒன்று சேரும் தருணம் நிகழ்வதுடன்> புதிய நட்பு உண்டாவதுடன்> உறவுகள் ஒற்றுமைப்படுவதற்கும்> பல்வேறான நன்மை தரும் விடயங்கள் நிகழவுள்ளதுடன்> எதிர்காலத்தில் ஒற்றுமையுடனான செயற்பாடுகள் மேற்கொள்ப்படுவதற்கும் களம் அமையப் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன்போது பல்வேறான தமிழர்களின் பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டி> பாரம்பரியம் மிக்க கலை கலாசாரப் போட்டிகள் போன்றன நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வின்போது பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும் சுவாமிக்கும் படைக்கப்பட்டதன் பின்னர் பரிமாறப்படவுள்ளது. இதன்போது இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்ததக்கது.
0 commentaires :
Post a Comment