11/02/2015

துருக்கியில் இன்று தேர்தல்

Résultat de recherche d'images pour "துருக்கியில் இன்று தேர்தல்"முப்பது வருடங்களாக நீடிக்கும் குர்திஷ்களுடனான பிரச்சினை தற்போது மீண்டும் வலுப்பெறுகின்றமை, அண்டைய சிரியாவிலிருந்து கட்டுப்பாட்டற்ற அகதிகள் வருகை என்றிருக்கின்ற நிலையில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது தடவையாக இன்று (01) நாடாளுமன்ற தேர்தலுக்காக துருக்கி வாக்களிக்கிறது. இன்று இடம்பெறுகின்ற தேர்தலில் 54 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாக்களிக்க பதிவு செய்திருந்த மக்கள், நாடு பூராவுமுள்ள 175,000 நிலையங்களில், கிழக்கு மாகாணங்களில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும் மேற்கு மாகாணங்களில்  காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்களிக்கவுள்ளனர். ஜூன் 7ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில்,  13 வருடங்களாக பெற்றிருந்த தனிப்பெரும்பான்மையை ஏகே கட்சி இழந்திருந்த நிலையில், நான்கு கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்திருந்தன. இம்முறையும் தனித்த ஆட்சிக்கான 276 ஆசனங்கள் கிடைக்கப் பெறாது என்று எதிர்பார்க்ப்படுகின்ற நிலையில் மீண்டும் கூட்டணி ஆட்சியே அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.   

0 commentaires :

Post a Comment