11/09/2015

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் செருப்பு விலைக்கு சமம்

Afficher l'image d'origineபொருட்களுக்கான விலையை குறைத்துக்காட்டும் வியாபாரத்தந்திரம் நாம் அறிந்ததே. அனேகமாக மிகபெரியதொகை ஒன்றை மலிவாக காட்டும் வகையில் அத்தொகையில் இருந்து 10சதம் அல்லது 10ரூபா குறைத்து விலைகள் போடப்படும்.  குறிப்பாக பாட்டா செருப்புக்கான விலைகள் எப்போதும் இலங்கையில் அந்தவகையிலேயே நிர்ணயிக்கப்படும்.  சந்திரிகாவின் ஓய்வூதிய அதிகரிப்பில் இந்த முறைமையே   நல்லாட்சி அரசாங்கம் பின்பற்றியுள்ளது. 

 உதாரணமாக முன்னாள்  ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஓய்வூதியம் நல்லாட்சி  அரசாங்கத்தில் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது ஓய்வூதியம் இதுவரை 25000 ரூபா ஆக இருந்துவந்த நிலையில் தற்போது அது நான்கு  மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவருக்கான ஒய்வூதியம் இனிவரும்காலங்களில் 98500 ரூபா  ஆக வழங்கப்படும். ஆனால் அதை ஒரு லட்சம் என்று நிர்ணயிக்காமல் 1500ரூபாக்களை குறைத்து செருப்பு வியாபாரிகள் போல் மக்களை ஏமாற்ற முனைந்துள்ளது இந்த அரசாங்கம். தோட்ட தொழிலாளருக்கு நாலு வீத சம்பள அதிகரிப்புக்கே அழுதுவடியும் அரசாங்கம் சந்திரிகாவுக்கு நாலு மடங்கு சம்பள அதிகரிப்பு வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தின்கீழ் அடகுவைத்து, சதிமூலம் அதை உடைத்து சீரழித்து, பொம்மை ஜனாதிபதியையும்  யூஎன்பி  ஆட்சியையும் உருவாக்க பின்னணியில் இருந்து செயல்பட்டமைக்கு கைமாறாக இந்த அதிகரிப்பு அவருக்கு ரணில் அரசினால் வழங்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

0 commentaires :

Post a Comment