நமது இன மக்கள் பல்வேறு காரணங்களால் இலங்கையில் அல்லல் பட்டு அவதியுறும்போது மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவும் பொருட்டு சுவிஸ் உதயம் என்னும் அமைப்பை உருவாக்கி நாம் உதவி செய்து வருவதை சில விசேமிகள் வேண்டுமென்றே விமர்சித்து எமது களங்கமற்ற சேவை மனப்பான்மைக்கு சேறு பூச எத்தனிப்பதானது மிருகத்தனம் பொருந்திய செயலாகும் என சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமுக சேவையாளருமான கே.துரைநாயகம் தெரிவித்தார்.
அண்மையில் வெற்றிநாதம் மற்றும் ஜே.வி.பி போன்ற இணையத்தளங்களில் சுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வெளியாகிய தகவலைக் கண்டித்து விடுத்துள்ள ஊடக அறிக்கைலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுவிஸ்உதயம் அமைப்பானது உலகினையே ஒரு கணம் திரும்பிப்பார்க வைத்த சுனாமி பேரனர்த்தின் விளைவால் தோற்றவிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். நமது மக்கள் கடந்த காலத்தில் யுத்தம் உள்ளிட்ட பலதரப்பட்ட காரணங்களால் பல்வேறான இழப்புக்களைச் சந்நித்தனர். பிற சமூகத்திடம் கையேந்தும் நிலை நமது மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக தன்மானம் உள்ள நாம் ஒரு குழுவாக இணைந்து மக்களுக்கு உதவும் வகையில் வியர்வை சிந்தி உழைத்த ஊதியத்தின் ஒரு பகுதியினை நமது மக்களுக்காக வழங்கி சேவை புரிந்து வருகின்றோம்.
எமது தன்னலமற்ற இச்சேவையினை சில கீழ்த்தரமான நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு முறைகேடான வழிகளில் பணம் சம்பாதித்து வரும் வம்பர்களின் கைகளில் உள்ள இணையத்தளங்களில் மாசற்ற எம்மை விமர்சித்திருப்பது அவர்களின் கையாலாகாத செயலாகும்.
சுவிஸ் நாட்டிலுள்ள நாம் உழைத்து வரும் ஊதியத்தின் ஓர் பகுதியினை நமது ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் ஒன்று சேர்த்து மக்களுக்காக செலவு செய்து வருகின்றோம். ஏனையவர்களைப்போல் நாமும் நமது உழைப்பும் என்ற சிந்தனையுடன் அல்லாமல் மக்களுக்காக எமது பணத்தினைக் கொண்டு சேவையாற்ற முற்படும்போது இவ்வாறான கீழ்த்தரமான கருத்தினை தான்தோன்றித்தனமாக பகிரங்கப்படுத்துவது எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.
நாமும் எமது அமைப்பும் பிழையான முறையில் செயற்பட்டால்தான் இவ்வாறான கயவர்கள் கூறும் கூற்றுக்கு பயந்து ஒழிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் நேரான பாதையில் உண்மையின் பக்கமாக சென்று கொண்டிருக்கின்றோம். உலகரங்கில் எத்தனையோ நன்மைகளைச் செய்த பெரியார்களை சில நாசகாரக்கும்பல் விமர்சிக்கவில்லையா? அது போன்ற ஓர் கயவர்களாகவே நாம் இந்த இணையத்தளக்காரர்களைப் பார்க்கின்றோம். எமது அமைப்பில் உள்ள தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட அங்கத்தர்வர்கள் அனைவரும் கடவுளைப் பயந்து மக்களுக்காக சேவையாற்றம் மனம் பொருந்தியவர்கள். எமது கூட்டுப் பொறுப்புடனான இச்சேவை சிலரது வயிற்றில் புழியைக் கரைக்கும் செயலாக உள்ளது. அதனால்தான் நாம் விமர்சிக்கப்படுகின்றோம். இவர்களது சேறுபூசும் இச்செயற்பாடு கண்டு நாம் துவண்டு விடப் போவதில்லை. எம் உடம்பில் உயிர் உள்ள வரை நமது மக்களுக்காக நாம் சேவை செய்வதை நிறுத்தி விடப்போவதில்லை.
மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் நன்கு புரிந்தவர்களும் கடந்த கால எமது உதவிகளையும் தெரிந்தவர்கள் இதுபோன்ற அபாண்டத்தினை எம்மீது சுமத்தமாட்டார்கள். நாம் பிறரின் பணத்தினை சுரண்டியோஇ களவாடியோ மக்களுக்காக உதவி செய்ய முன்வரவில்லை. எமது சொந்தப் பணத்தின் ஓர் பகுதியினைத்தான் நாம் பாகுபாடு பார்க்காமல் நமது மக்களுக்காக வழங்கி வருகின்றோம். எமது உதவியின் மூலம் எத்தனையோ ஏழை மாணவர்கள் உயர் நிலை அடைந்துள்ளார்கள். ஏராளமான எம் இன உறவுகள் வாழ்வாதாரத்தில் உயர்ந்து நின்கின்றார்கள். இவை எல்லாம் எங்கே விளங்கப்போகின்றது உரிமைப் போராட்டம் என்னும் போர்வையில் நமது மக்களின் சொத்துக்களையும் உயர்ச்சியினையும் பறித்து சுய நலத்திற்காக மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி விட்டு தற்போது வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இவ்விடயம் விளங்குவதற்கு நீண்ட காலமெடுக்கும்.
எமது களங்கமற்ற இச்சேவைக்கு சேறு பூச எத்தனித்த இணையத்தளங்களுக்கெதிராக நாம் தற்போது வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். நிச்சயம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டணை பெற்றுக்கொடுக்கும் வகையில் நாம் ஓய்ந்து நிற்கப்போவதில்லை.
தேசியம் தமிழ்தாயகம் என்று மக்களை உசுப்பேற்றி விட்டு அதே மக்களைப் பலிக்கடாக்களாக்கி தற்போது உயிர் தப்பி வெளிநாடுகளில் சுக போக வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் கையாலாகாத கபோதிகளின் இவ்வீனச் செயலுக்கு தக்க தண்டணை பெற்றுக் கொடுப்பதன் மூலம் நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்பட்டு வரும் எம் போன்ற அமைப்பினருக்கு பாதுகாப்பாய் அமைவதுடன் எதிர்காலத்தில் வீண் பழி சுமத்தும் இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும் என்றார்.
உதயம் சார்பாக M.A. Ramees
Mobile # : 071 4899 337,
077 3682188

0 commentaires :
Post a Comment