கிளிநொச்சியில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் அம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிப்பொருட்களையும் வழங்கி வைத்தார்.
நேற்று செவ்வாய் கிழமை கிளிநொச்சி பொன்னகர் மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்திலும், கண்டாவளை கிராம மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள கண்டாவளை மகா வித்தியாலயத்திற்கும் சென்ற அவர் மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டதோடு பாய் மற்றும் உலருணவுப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்
மக்கள் எதிர்நோக்கும் இவ்வாறான பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் ஒவ்வொரு பருவ மழையின் போதும் மக்கள் இவ்வாறு இடம்பெயர்ந்து செல்ல முடியாது எனவே அதற்கான நிரந்தர தீர்வு அவசியம் ஆனால் இன்று மக்களை பற்றி சிந்திப்பதற்கு நாட்டில் எவரும் இல்லை எனக்குறிப்பிட்ட அவர் நாம் தொடர்ந்தும் மக்களுடனேயே இருப்போம் மக்களின் பிரச்சினைகளை எம்மால் இயன்றளவுக்கு தீர்த்து வைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment