இன்று கழிவுப்பொருட்கள் அனைத்தும் பெரும் குப்பை மேடுகள் போல் இன்று காட்சியளிக்கின்றன. இக் கழிவுகள் சரியான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டு கழிவுகள் இடப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
குறிப்பாக இக் கழிவுகள் இங்கு கொட்டப்படுவதனால் அருகில் இருக்கும் வீட்டுத்திட்ட மக்கள் நிம்மதியான உணவு உண்பதற்கு கூட முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாக குறிப்பிடுகினறனர்.
மீனவர்கள் கடற்கரையோரங்களில் நின்று தங்களது தொழிலை செய்ய முடியாத அளவு இருப்பதாக குறிப்பிடுகின்றனர். மீனவர்கள் தங்களது காலை உணவுகளை கடற்கரை பிரதேசத்தில் வைத்தே உண்ணவேண்டிய சந்தர்பங்கள் அதிகமாக காணப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த வீதியினூக தாங்கள் செல்லவேண்டி இருக்கின்றது ஆனால் இன்று செல்முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இக் குப்பை மேடுகளில் அதிகமாக மாடுகளும் நாய்களும் நிறைந்து காணப்படுகிறது. இப் பிராணிகள் கழிவுப்பொருட்களை அருகில் இருக்கும் விவசாயம் செய்யப்படுகின்ற பயிர்களுக்குள்ளும் வீடுகள் காணப்படுகின்ற பகுதிகளிற்குள் இழுத்துச் செல்கின்றன.
இவ்வாறு பல பிரச்சினைகள் காரணமாக இங்கு காணப்படுகின்ற கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் ஆலயம் , மீனவர் சங்கம் இளைஞர் கழகம் ஆகிய அமைப்புக்கள் இனைந்து களுதாவளை மன்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை செயலாளரிடம் நேரடியா சென்று இங்கு குப்பை கொட்டுவதனை உடனடியா நிறுத்துமாறு மனு ஒன்றினை இன்று வழங்கியிருந்தனர்.
இதனை இளைஞர் கழக ஆலோசகர் மனோகரன் மதன் மன்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் திரு.யா . வசந்தகுமார் அவர்களிடம் கையளித்திருந்தார்.
இதற்கான தீர்வினை பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வினை மிக விரைவாக எடுப்பதாகவும் திரு.யா . வசந்தகுமார் குறிப்பிட்டார்.
இவ்விடயம் பற்றி இளைஞர் கழக ஆலோசகர் மனோகரன் மதன் குறிப்பிடுகையில் இக் கழிவுகள் சம்மந்தமான பிரதிகளை பிரதேச செயலாளருக்கும் மற்றும் அரசியல் சார்ந்த சிலருக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்
0 commentaires :
Post a Comment