11/06/2015

நிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் வீடமைப்பு திட்டம் தாமதம்- சபையில் திலகராஜ் சுட்டிக்காட்டு

நிறுவனங்களுக்கு நிறுவனமும் அமைச்சுக்கு அமைச்சும் மக்களை வைத்து பந்தாடுவதன் காரணமாகத்தான் மீரியபெத்தை பிரதேசத்தில் வேலைத்திட்டம் முழுமையாக நடைபெறாமல் இருக்கின்றது என்று நுவரெலியா மாட்ட நாடாமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் நேற்று சபையில் சுட்டிக்காட்டினார்
ஒரு முறையான திட்டத்தின் கீழ் அந்த மக்களின் நிலையை கவனத்திற்கொண்டு துரிதமாக இந்த வேலைத்திட்டத்தை தற்போது பொறுப்பேற்றுள்ள இடர் முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியவை வருமாறு:
மீரியபெத்தை அனர்த்தம் இடம்பெற்று ஓராண்டு பூர்த்தியாகி அந்த மக்கள் தங்களது வாழ்விட கோரிக்கைக்காக வீதியில் இறங்கி போராடிகொண்டிருக்கும் ந்நத கால கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஒத்திவைப்பு பிரேரணை மூலமாக அதனை மீண்டும் நினைவுபடுத்தி அந்த மீரியதபத்தை மாத்திரம் அல்ல மீரியபெத்தைபோன்று மலைநாட்டிலுள்ள பல்வேறு பிரதேசங்களிலே குறிப்பாக இடம்பெற்றுவரும் மண்சரிவு குறித்த கவனத்தை இந்த சபையில் முன்வைத்திருக்கின்றார். அவரது பிரேரணையை நான் ஆமோதிக்கின்றேன். 
தோட்டப்பகுதிகளிவ் வீடமைப்புச் செய்வதற்கு ட்ரஸ்ட் என செயற்படுகின்ற பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் கடந்த 22 வருடமாக அதாவது 1992 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டபின்னர் அதனை செயற்படுத்தி வருகின்றது. ஆனால், மீரியபெத்தை வீடமைப்புத்திட்டத்தை செய்து கொண்டிருக்கின்ற செயற்பாட்டு நிறுவனமாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA urban development Authority ) அது ஏன் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி முதலாவதாக எழுகின்றது
இதனை கட்டும் ஒப்பந்தகாரராக இலங்கை இராணாம் செயற்படுகின்றார்கள். இங்கேயே பிரதான அரசியல் இருக்கின்றது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் திகதி அந்த அனார்த்தம் இடம்பெற்றதன் பின்னர் ஓரிரு மாதங்களின் பின் ஜனாதிபதித் தேர்தல் வந்ததன் காரணமாக அந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் அவர்களது சகோதரர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக் ஷ தன்னுடைய அமைச்சிக்கு கீழக செயற்பட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைத்து அவருக்கு கீழாக பொறுப்பாக இருந்த இரானுவத்தினருக்கு அதனை கொடுத்த நேரம் அவர்கள் தோட்டபகுதிகளிலே எந்த விதமான அனுபவம் அற்றவர்களாக நகர அபிவிருத்திக்கு பொறுப்பானவர்கள் தோட்டப்பகுதிக்கு நியமிக்கப்பட்டார்கள்
ஆனால், பெருந்தோட்டப்பகுதிகளில் எவ்வித வீடமைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததன் பின்னர் இந்நிலை கைவிடப்படிருந்தது. வேலுகுமார் எம்.பி கூறியது போல அந்த 90 மில்லியன் ரூபா நிதியில் 30மில்லியன் ரூபா ஏற்கெனவே நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர்களை வைத்து அதனை .தொடர வேண்டிய நிலையில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை பெறுப்பேற்ற அமைச்சர் திகாம்பரம் நகர அபிவிருத்தி அதிகார சபையை இணைத்துக்கொண்டு தனது அமைச்சுக்கு கீழாக அந் நிறுவனம் வராத போதும் அவர்களையும் இணைத்துக் கொண்டு முன்னெடுத்தார்.
அந்த குறிப்பிட்ட நாள் வேலைத்திட்டத்திலேயே இப்போது கட்டப்படிருக்கின்ற குறைந்தபட்ச அந்த நான்கு வீடுகளும் அரைவாசி நிலையில் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்ற அந்த 14வீடுகளும் ஓரளவுக்கேனும் அங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் மே மாதம் மீண்டும் பொதுத்தேர்தலை இலக்காக கொண்டு இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு இந்த கட்டமைப்பு பணிகள் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு நிறுவனங்களுக்கு நிறுவனமும் அமைச்சுக்கு அமைச்சும் மக்களை வைத்து பந்தாடுவதன் காரணமாகத்தான் வேலைத்திட்டம் முழுமையாக மீரியபெத்தை பிரதேசத்தில் நடைபெறாமல் இருக்கின்ற என்ற செய்தி சொல்ல வேண்டும். எனவே ஒரு முறையான திட்டத்தின் கீழ் அந்த மக்களின் நிலையை கவனத்திற்கொண்டு துரிதமாக இந்த வேலைத்திட்டத்தை தற்போது பொறுப்பேற்றுள்ள இடர் முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.
நன்றி கருடன்

0 commentaires :

Post a Comment