யாழ் குடா நாட்டில் காணப்படும் தீவான நாக தீபத்தை, நயினா தீவாக பெயர் மாற்றம் செய்ய வடமாகண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
கடந்த 5ம் திகதி வடமாகண சபை அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை நயினா தீவு பெயர் விவகாரத்தில் மூக்கை நுழைத்து இருக்கும் இராவண பலய என்ற தீவிரவாத அமைப்பினர் அதன் பெயரை நாக தீப எனவே பேண வேண்டும் என கூக்குரலிடுகின்றனர்.
தமிழ் இந்துக்கள் இந்த தீவின் பெயரை நயினாதீவு என்றும், சிங்கள பௌத்தர்கள் நாகதீப என்றும் பேச்சு வழக்கில் அழைத்துக்கொள்ளட்டுமே. என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.இது எப்படியுள்ளது பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
0 commentaires :
Post a Comment