"ஒரு தேசப்பற்று மிக்க அரசியல்வாதியால் மட்டக்களப்பு பட்டினத்தை உலகதரம்மிக்க வெனிஸ் நகருக்கு நிகராக மாற்றியமைக்கமுடியும்" என்பார் முதுபெரும் எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள். ஆம் மட்டக்களப்பு ஒரு அழகிய பட்டினம், அதிலும் மட்டக்களப்பு மாநகரம் அமைந்துள்ள பிரதேசமானது மீன்பாடும் வாவியால் சூழப்பட்ட ஒரு வனப்புமிகு தீவு. அந்த புளியந்தீவின் ஒருமருங்கில் தான் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த மட்டக்களப்பை மாநகரமாக்கி அதன் முதல் மேயராக அமர்ந்தவர் சொல்லின் செல்வர் இராஜதுரை ஆகும். அதன்பின்னர்தான் மட்டக்களப்பு ஒரு நகரமாக மெதுமெதுவாக வளர்ச்சிகண்டது.
நகருக்குள் நுழையும் பிரதான வாயிலான கோட்டமுனை பால வாவிக்கரையோரமாக இன்று வீ.சி.கந்தையா பூங்கா இருக்கின்ற இடத்தில் மில்க் பார் என்று அழைக்கப்பட்ட அந்த வியாபார நிலையம் ----- --- அதனருகே ஒருசிறிய மண்டபத்துடன் காணப்பட்ட பஸ்நிலையம்----அதனை சுற்றி கஜு பருப்புகளை விற்பனைக்காக குவித்துவைத்துக்கொண்டு தங்கள் அன்றாட ஜீவனத்துக்கு காத்திருக்கும் மொக்காட்டு உம்மாமார்கள்--- இவையெல்லாம் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரான மட்டக்களப்பின் நினைவலைகள்.
1970ம் ஆண்டு தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரான இராஜன் செல்வநாயகம்தான் ஒரு மாநகருக்குரிய தேவைகளை பூர்த்தி செய்து மட்டக்களப்பை பலவழிகளிலும் அபிவிருத்தி செய்தவர். நகர மக்களுக்கான குழாய்வழி நீர்வினியோகம் தொடக்கம் நவீன கோட்டமுனைபாலம், படுவான்கரையையும் மட்டக்களப்பு நகரத்தையும் இணைக்கும் புதிய வலையிறவு பாலம், பிரதான தபால் நிலையகட்டிடம், வெபர்மைதான ஸ்டேடியம், மட்டக்களப்பின் முதல் முதலான பொலிஸ்நிலைய அடுக்குமாடி கட்டிடதொகுதிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் சுருங்க சொன்னால் யாழ்ப்பாணத்துக்கு ஒரு அல்பிரட் துரையப்பா போல மட்டக்களப்புக்கு இராஜன் செல்வநாயகம் இருந்தார். ஆகவே அவருக்கும் துரோகிப்பட்டம் வழங்கி கெளரவிக்க தமிழரசுக்கட்சியினர் தவறவில்லை.
இந்த காலகட்டத்தில்தான் கோட்டமுனை பாலத்தின் அருகேயிருந்த மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ்நிலையம் 1978ம் ஆண்டு வீசிய சூறாவளியினால் முற்றாக இடிந்து வீழ்ந்தது. அதன்பின்னரே பிரதான பஸ்நிலையம் ராஜேஸ்வரி தியேட்டருக்கு எதிராக இருந்த ஆற்றோர வெளிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அவ்வேளைகளில்தான் துரோகிகளுக்கு இயற்கைமரணம் இல்லை என்று தமிழரசுகட்சியினர் மேடைகளில் முழங்கி தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகளாய் மாற்றிக்கொண்டிருந்தார்கள். அல்பிரட் துரையப்பா பிரபாகரனால் சுட்டுகொல்லப்பட்டார். மட்டக்களப்பை சேர்ந்த கல்லடி மைக்கலிடம் வழங்கப்பட்ட இராஜன் செல்வநாயகத்தை தீர்த்து கட்டும் பொறுப்பை சரிவர நிறைவேற்றாது இருமுறை யாழ்ப்பாணம் திரும்பிவந்தமையால் இராஜன் செல்வநாயகம் தப்பித்துகொண்டார். ஆனால் மைக்கல் துரோகியாக்கப்பட்டு பிரபாகரனால் சுட்டுகொல்லப்பட்டார்.
இராஜன் செல்வநாயகம் மைக்கலால் சுட்டுக்கொல்லபடாது தப்பித்து கொண்டாலும் அரசியலில் அவரால் உயிர்பிழைக்க முடியவில்லை. மட்டக்களப்புக்கு சொர்க்கத்தையே கொண்டு கொடுத்தாலும் சேர்ந்தது ஸ்ரீமாவுடன்தானே? தமிழின துரோகி, அரச கைக்கூலி போன்ற வசைகளும் துரோக பட்டங்களும் தமிழரசு கட்சியினரால் அள்ளிவீசப்பட்டன. 1977ஆண்டு தேர்தலில் இராஜன் செல்வநாயகம் தோல்விகண்டார்.
அதன்பிறகு மட்டக்களப்பில் இராஜதுரை, தேவநாயகம் போன்றோர் அமைச்சர்களாக இருந்தபோதிலும் முறையே இசைநடன கல்லூரியையும், கிழக்கு பல்கலைகழகத்தையும் உருவாக்கியதை தவிர வேறு எதையும் செய்யும் சூழல் இருக்கவில்லை. அவ்விருவரும் கொழும்பிலேயே காலத்தைகழிக்க நேரிட்டது. வடக்கு கிழக்கில் வன்முறை தலைவிரித்தாட தொடங்கியது.
1977ல் இருந்து தீவிரவாத நிலைமைகள் அதிகரித்து அபிவிருத்திகள் முற்றாக முடக்கப்பட்டன. தமிழீழம் என்னும் ஒரே இலக்கு நோக்கி அனைத்து அரசியல் பயணமும் ஒற்றைத்தடத்தில் பயணிக்க வேண்டியதாயிற்று. அன்றிலிருந்து மக்களின் அன்றாட வாழ்வுகள் சீரழிக்கப்பட்டன, போக்குவரத்துக்கள் நிர்மூலமாக்கப்பட்டன, குறிப்பாக படுவான்கரை தமிழீழவாதிகளின் பிடியிலும் எழுவான்கரை அரசாங்கத்தின் பிடியிலும் சிக்கித்தவித்தன, மாலை ஆறுமணிக்குமேல் போக்குவரத்துக்கள் கிடையாது, சினிமாக்கள் கிடையாது, கடைத்தெருக்கள் கிடையாது, கொலைகள், கைதுகள், ஆள்பிடிகள், கடத்தல்கள் என்று மயான அமைதியுடன் பொழுதுகள் விடிந்தன. நாய்களும் நரிகளும் மட்டுமே இராக்காலங்களில் அந்த பஸ்நிலையத்தை தரிசித்தன. போக்குவரத்து தடைகளும், இராணுவ காவலரண்களும், மண்மூடைகளுமே மட்டக்களப்பு நகரை சுமார் முப்பது வருடங்களாக ஆக்கிரமித்திருந்தன.
1978ல் உருவாகிய மட்டக்களப்பு நகரின் பிரதான புதிய பஸ்நிலையம் இந்த நீண்ட போர்க்காலத்தின் ஒருயுத்த கைதியை போல நலிந்து மெலிந்து ஒரு நடைபிணமாக காட்சியளித்தது. மட்டக்களப்பு வாவிதனில் மீன்கள் பாடவில்லை. பிணவாடைகள் மட்டுமே வீசின.

எப்போது இந்த நிலை மாறும்? எப்போது எமது இயல்புவாழ்வு திரும்பும்? எப்போது இந்த வாவியிலே மீண்டும் மீன்கள்பாடும்? காலத்தின் மீது நம்பிக்கையிழந்து காத்துக்கிடந்தனர் மக்கள். சுருங்க சொன்னால் பாரதி பாடியதுபோல் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? என்று மக்களுடன் சேர்ந்து மட்டக்களப்பு பஸ் நிலையமும் காத்துக்கிடந்தது. ஆனால் ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ்-முஸ்லீம் அரசியல்வாதிகள் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள், எவருக்குமே இந்த மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ்நிலையம் கிடந்த கோலம் தெரியவில்லை. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற ஓர்மம் வரவில்லை. ரிஸ்வி சின்னலெப்பை, சம்பந்தமூர்த்தி, செல்வராஜா, கோவிந்தன் கருணாகரன் (ஜனா), பிரின்ஸ் காசிநாதர், சாம் தம்பிமுத்து, கணேசமூர்த்தி பசிர் சேஹுதாவுத், அமிர்அலி, ஹிஸ்புல்லா, அலிசாகிர் மெளலானா, துரைராசசிங்கம், வெள்ளிமலை, ஜோசேப் பரராசசிங்கம், கனகசபை, தங்கேஸ்வரி, அரியநேந்திரன், ---- என்று எண்ணற்ற தலைமை கள் ஒவ்வொன்றாக கடந்து சென்றன.
ஆம் மட்டக்களப்பு மாநகரம் மீண்டும் தன்னை புது பொலிவு பெறசெய்யப்போகும் அந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்துக்கிடந்தது. அவனது பெயர் பிள்ளையான் என்றிருக்கும் என அதுவரை காலமும் யாருமே எண்ணிப்பார்த்திருக்கவில்லை.
இந்த வரலாற்றின் நீட்சியில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக திகழ்ந்த பிள்ளையானின் ஆட்சிகாலமே எவருமே கண்டிருக்காத அந்த கனவை நனவாக்கியது என்பதை யாரும் மறுத்துரைக்க முடியாது..
* கடைத்தொகுதிகளுடன் கூடிய புதிய மத்திய பஸ் நிலையம் 7கோடி ரூபாய்கள் செலவில் பிரமாண்டமானதொன்றாக கட்டப்பட்டது.
* மாநகர நுழைவாயில் வீதிகள் அனைத்தும் இருவழிபாதை களாக முதன்முதலாக விருத்தி செய்யப்பட்டன.
* வெபர் விளையாட்டு மைதானம் சர்வதேச தரமிக்கதொன்றாக மத்திய அரசுடன் இணைந்து விருத்தி செய்யப்பட்டது.
* கல்லடி பாலம் மத்திய அரசுடன் இணைந்து 260 கோடி ரூபாய்கள் செலவில் மீள புதியதாக அமைக்கப்பட்டது.
* நகரின் மத்தியில் அமைந்துள்ள காந்திபூங்கா ஐரோப்பிய நகர பூங்காக்களுக்கு நிகரானதொன்றாக அபிவிருத்தி செய்யப்பட்டது.
* நகரைசுற்றி வாவிக்கரையோரமாக நடைபாதையும் ஆங்காங்கே பூங்காக்களும்இ இருக்கைகளும் உல்லாச படகுச்சவாரி நிலையங்களுமாக எழில்மிகு நகரம் எழுந்து நிற்கின்றது.
* பிள்ளையான் அடிக்கல் நட்டு திறந்துவைக்கமுடியாமல் போன ஒரேயொரு திட்டம் இலங்கையின் முதல்தர நூல் நிலையம் ஆகும். புளியன்தீவின் கிழக்கு கரையில் 22 கோடி ரூபாய்கள் செலவில் அதனை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டபோதும் அது இன்னும் பூரணமாகாத நிலையில் உள்ளது.
இவையனைத்தும் மட்டக்களப்பு நகரினை அடிப்படையாக கொண்ட செயல்திட்டங்கள் மட்டுமே ஆகும். மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் அவரால் மேற்கோள்ளப்பட்ட அபிவிருத்திகள் இன்னும் ஏராளமானவையாகும்.
ஆனால் தமது அறுபத்தைந்துகால அரசியல் வரலாற்றின் அடையாளமாக ஒரு செங்கல்லைத்தானும் தமிழ் மக்களுக்கு காட்டமுடியாத தமிழரசுகட்சியினர் தமது கையாலாகத்தனங்களை மறைக்க பிள்ளையானை நோக்கி துரோகக் குற்றம் சாட்டுகின்றனர். ஊடகங்கள் அனைத்தும் பிள்ளையான் மக்களுக்காக செய்த பணிகள் அனைத்தையும் இருட்டடிப்பு செய்கின்றன.
தமிழரின் அரசியல் பாதையில் பன்மைத்துவ பண்புகளின் ஆத்மீக பலத்தை தமிழரசு கட்சியினர் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. அரசியல் போட்டியாளர்களை பழிவாங்குவது ஒன்றே அவர்களுக்கு தெரிந்த வழியாகும். 1975ல் பிரபாகரனை கொண்டு அன்று துரையப்பாவின் உயிரை பறித்தனர். 2015ல் அதனை செய்யமுடியாத நிலையில் ரணிலைகொண்டு பிள்ளையானை சிறையில் அடைத்தனர் என்று வரலாறு ஒரு நாள் எழுதட்டும்.
மீன்பாடும் தேனாடான்

நன்றி தேனீ
0 commentaires :
Post a Comment