11/20/2015

முன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசதிகள் இன்று தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் உபதலைவரினால் கையளிக்கப்பட்டன

*கல்குடா வலயத்திற்கு உட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இன்று ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான ‘கைகளைச் சுத்தமாக கழுவி சுகாதாரத்தினைப் பேணுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான ஒவ்வொரு வகுப்பறையினுள்ளும் கைகழுவும் நீர்க்குழாய் வசதிகள் செய்து இன்று உத்தியோகபூர்வமாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ.சி.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் செய்து கொடுக்கப்பட்ட இத்திட்டத்தினை அவரின் சார்பாக தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உபதலைவரும் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான திரு.நா.திரவியம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.


0 commentaires :

Post a Comment