இலங்கை கொடுஞ்சிறைகளில் பல வருடக்கணக்காக எந்த நீதி விசாரணைகளுமற்று சர்வதேச மனித உரிமைகளிற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நோர்வேயில் இடம்பெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட கண்டன போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் நோர்வே கிளை ஒழுங்கு செய்திருக்கின்றது.
மனித உரிமையாளர்கள், ஜனநாயகவாதிகள், மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் அனைவரையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு இலங்கை ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களுக்கான எமது கண்டனத்தை ஒன்றுபட்டு தெரிவிக்க அழைக்கின்றோம். இலங்கை அரசின் மனித உரிமைகளிற்கு எதிரான பதாகைகளுடன் திரண்டு வந்து உங்கள் ஆதரவினை இந்த போராட்டத்திற்கு வழங்குமாறு அழைக்கின்றேம்.
இடம்: நோர்வே பாராளுமன்ற முன்றல்
காலம்: 03.12.2015 வியாழன் மாலை 17:00 மணி முதல்
காலம்: 03.12.2015 வியாழன் மாலை 17:00 மணி முதல்
0 commentaires :
Post a Comment