நெடுங்காலத்திற்கும் முன் மலாடபுரம் என்னும் ஊரில் இருந்த பௌத்த சங்க அறிஞர்கள் ஆமணக்கு (ரிசினஸ் கம்யூனிஸ்) தாவரங்களான பேராமணக்கு, சிற்றாமணக்கு விதைகளைக் கொண்டு அதிலிருந்து எண்ணெய் எடுத்து அதை மருந்துகளுடன் இணைத்து ஆராய்ந்தும், அதன் மூலம் ஏற்றப்படும் தீபம் வெப்பம் இன்றி குளிர்ச்சியான சூழலைக் கொடுப்பதை அறிந்தும் அவற்றை மக்களுக்கும் பயன்படும் நோக்கத்தில் அரசனிடம் சமர்ப்பித்தனர். பௌத்த ஆராய்ச்சியாளர்களின் படி ஆமணக்கு விதைகளைச் சேகரித்து எண்ணெய் எடுத்து தனது அரசாட்சிக்குட்பட்ட பெரும் மலை ஒன்றில் பெரிதாக பள்ளம் வெட்டி அதில் ஆமணக்கு எண்ணெய் ஊற்றி, பருத்தியினால் பெருந்திரிகளை தயாரித்து அதிலிட்டு தீபமேற்றிட ஆனையிட்ட அரசன், விடியும் வரை தீபம் எரிவதைக் கண்டு பிறகு காலையில் அம்மலையில் இருக்கும் பறவைகளுக்கும் உயிர்களுக்கும் ஏதேனும் அதனால் தீங்கு ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்தார். எவ்வுயிர்களுக்கும் அதனால் எத்தீங்கும் ஏற்படவில்லை என்பதை அறிந்த அரசன் மக்களின் பயன்பாட்டுக்கு ஆமணக்கு எண்ணெயை அறிமுகப்படுத்தினார். ஆனாலும் இதுவரை பயன்படுத்திராத அவ்வெண்ணெயை பயன்படுத்த மக்களுக்கு சிறிது அச்சமாக இருந்தது. அதனால் மூன்று நாட்களுக்கு ஆமணக்கு எண்ணெய் இட்ட தீபத்தை வீட்டு வாசல்களிலும், மாடங்களிலும் ஏற்றி சோதித்தனர். அப்போதும் எந்தக் கெடுதலும் வராததைக் கண்டு மகிழ்வுற்ற மக்கள் ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தத் துவங்கினர். அச்சம்பவங்களை நினைவுக் கூறவே கார்த்திகை தீபம் என்னும் கார்த்துல தீபம் கொண்டாடப்பட்டது. அதாவது, பௌத்த அறிஞர்கள் கருமேகம் சூழும் மாதத்தை கார்திகை என்று பெயரிட்டனர். காரிருளை அகற்றும்-துலக்கும்- தீபத்தை கார்த்துல தீபம் என்று குறிப்பிட்டனர். கார்த்துல தீபத்தை கார்த்திகையில் ஏற்றி மக்கள் கொண்டாடினார்கள். முதன் முதலில் பெருந்தீபம் ஏற்றப்பட்ட மலையை மக்கள் அண்ணாந்து பார்க்கும் மலை என்றனர். பிறகு அதுவே அண்ணாமலை என்றும் திருவண்ணாமலை என்றும் ஆனது. அம்மலையில் அமைக்கப்பட்ட பௌத்த விஹாரைக் கைப்பற்றிய பார்ப்பனிய மதம் கார்த்திகை மாத பௌர்ணமியில் கொண்டாடப்பட்ட கார்த்துல தீபத்தையும் கைப்பற்றி கட்டுக்கதைகளைத் திரித்துக்கொண்டது.
சீனாவிலிருந்து வந்த யாத்ரீகன் யுவாங் சுவாங் சீனாவுக்கும் இப்பண்டிகையை பரபப்பச்செய்தார். நாம் கார்த்திகைக் கொண்டாடும் இதே காலத்தில் சீனாவில் தீபங்கள் ஏற்றுவதும் பட்டாசு வெடிப்பதும் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் ஆமணக்கு உற்பத்தியில் இந்திவுக்கு முதலிடம், சீனாவுக்கு இரண்டாமிடம் என்பதையும் இங்கே கவனம் கொள்ளவேண்டும்.
நன்றி *மக்கள் குடியரசு *தி.ஸ்டாலின்
0 commentaires :
Post a Comment