11/02/2015

மட்டக்களப்பில் ஓநாய்கள் அழுகின்றன



கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று  ஆர்ப்பாட்டமொன்று 
முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 
தமது கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மனித உரிமை மீறல் எனவும், அதற்கான நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை முன்னெடுத்தவர்கள் கூட்டமைப்பினர் என்பதுதான் இங்கே முக்கியமானது பாராளுமன்ற உறுப்பினர் அமல் இதில் கலந்துகொண்டுள்ளார்.

*இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயம்தான் இன மத வேறுபாடுகளை களைந்து ஒடுக்கப்படும் மக்களின் சார்பாக போராட ஒன்றிணைவது அவசியமானது. 

ஆனால் 

*இந்த "நல்லாட்சிக்கு" ஆலாபரணம் பண்ணியவர்கள் இந்த கூட்டமைப்பினரேஆகும். 

*ஏகாதிபத்திய யு.என்.பி ஆட்சிக்கு தவம் கிடந்தவர்கள் இந்த கூட்டமைப்பினரேஆகும்.

*இந்த அரசாங்கத்தை  உருவாக்கியவர்கள் இந்த கூட்டமைப்பினரே ஆகும். 


*இந்த கூட்டமைப்பினரே இன்று மாணவர்களுக்கு அநீதி இழைக்கபடுவதாய் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.

*யாழ் மேட்டுக்குடி,இனவாத தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் இந்த அரசுமீதான கோபதாபங்களை தமது அரசியலுக்கு பயன்படுத்த முனைவது கீழ்த்தரமானது ஆகும்.

இந்த கட்டுமிரண்டித்தனத்துக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் இன்று ஆடுகள் நனைகின்றதாம் என்று ஓநாய்கள் அழுதது போன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.




0 commentaires :

Post a Comment