இந்திய அரச வஞ்சனையால் கொடிய மனித உரிமை மீறல்களோடு தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இயங்கும் சித்திரவதை முகாம்களில் வஞ்சிக்கப்படும் ஈழ தமிழ் அகதிகளை விடுவித்து சிறப்பு முகாம்களை மூட நடத்தி வரும் தொடர் கவனஈர்ப்பு போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணில் இருந்தும் தமிழ் மக்களின் ஒருமித்த குரலிலான கண்டன நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 29 அன்று ஸ்கார்புரோ நகரில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு முகாம்களின் சித்திரவதைகளை சுமார் 8 ஆண்டுகள் தமிழகத்தில் சிறைகளிலும் சிறப்பு முகாம்களிலும் வாழ்ந்து அனுபவித்த கண்கண்ட சாட்சியான ஈழத்து போராளி பாலன் தோழர் அவர்களின் "சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்" என்ற நூலின் அறிமுகமும், பல மனித உரிமைக்காக குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர்களின் கண்டன உரைகளும் மக்கள் கருத்தரங்கமும் இடம்பெறவுள்ளன.
இந்த நூலுக்கான வெளியீட்டு உரிமையினை அனைத்து மக்களிடமும் பாலன் தோழர் விடுத்துள்ளதோடு இந்த நூல் அறிமுக நிகழ்வை வழமைக்கு மாறாக மக்கள் கவன ஈர்ப்பு கருத்தரங்காக செயல்வடிவம் கொடுக்குமாறு பாலன் தோழர் அவர்கள் வேண்டியதற்கிணங்க முன்மாதிரி செயல்வடிவ கண்டன மக்கள் கருத்தரங்கு கூட்டமாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
பொய் வாக்குறுதிகளை கடந்து இன்னமும் மூடப்படாத சிறப்பு முகாம்கள் தமிழர்களை கொல்லும் கொலைக் களங்கள்.
இன்னமுமே பல தமிழ் மக்களுக்கு சிறப்பு முகாம் பற்றிய உண்மைகள் தெரியவில்லை என்பது கொடிய வலி தரும் செய்தியாகும்.

உயிரை உருக்கும் உண்மைகள்.. கொடும் வலிகளை இந்த நூற்றாண்டில் மனித உரிமை மீறலோடு அனுபவித்து வருகின்றார்கள் எம் ஈழத்தமிழர்கள் அன்னை தமிழகத்தில் என்பது உண்மையில் ஒவ்வொரு தமிழர் நெஞ்சங்களையும் உலுக்கி உணர்வேற்றி பொங்கி எழ வைக்க வேண்டிய செய்தி.
ஆனால் இன்னமும் மூடி மறைக்கும் கொடிய உண்மைகளாக இந்த அநீதிகள்.
தமிழினம் உலகப் பரப்பெங்கும் வலிமையாக குரல் எழுப்பி எதிர்த்து போராடி இந்த சிறப்பு முகாம்களை மூட வேண்டும். அதற்கு இது போன்ற கவன ஈர்ப்பு கண்டன நிகழ்வுகள் காலத்தின் தேவையாகும்.
இந்த மக்கள் போராட்டத்திற்கான அழைப்பை அனைத்து மனித உரிமையை மதிக்கும் மக்களுக்கும் மக்கள் விடுத்துள்ளார்கள் என்பதால் அனைவரும் அனைவரையும் ஒருங்கிணைத்து பங்கேற்போம்.
இந்த மக்கள் போராட்டத்திற்கான அழைப்பை அனைத்து மனித உரிமையை மதிக்கும் மக்களுக்கும் மக்கள் விடுத்துள்ளார்கள் என்பதால் அனைவரும் அனைவரையும் ஒருங்கிணைத்து பங்கேற்போம்.
மக்களுக்காக எவர் போராடினாலும் நமக்குள் இருக்கும் முரண்கள் கடந்து ஒன்றுபட்ட மக்களாக குரல் கொடுப்போம்.
நன்றி முகனூல்
நன்றி முகனூல்
0 commentaires :
Post a Comment