வியாபார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் அதனை நேரடியகச் சென்று சுவீஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாண தலைவர் மு.விமலநாதன் பிரதித்தலைவர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உள்ளிட்டோர் நெரடியாக அப் பெண்ணின் இல்லத்திற்குச்சென்று வியாபார நடவடிக்கையினைப் பார்வையிட்டுள்ளனர்
இதுதொடர்பாக கிருஷ்ணவேணி கருத்துத்தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையினால் எனது கணவர் இறந்திருந்தார் அதனால் எனது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை உட்பட குடும்பத்தை தலைமைதாங்குவதில் பல சிக்கல் ஏற்பட்டது இந்நிலையில் சுவீஸ் உதயத்திடம் இக்கோரிக்கையினை முன்வைத்தேன் அதன் நிமிர்த்தம் எனது வீட்டிற்கு சுவீஸ் உதயத்தின் பொருளாளர் கே.துரைநாயகம் நேரில்வந்து நிலைமையினை அவதானித்ததுடன் எனக்கான உதவியினை வழங்கிவைத்துள்ளனர் இதனால் நாளாந்தம் எனது குடும்பம் கஸ்ரம் இல்லாது வாழ்ந்துகொண்டிருக்கின்றது.
அதற்காக சுவீஸ் உதயத்தின் தலைவர் சுதர்சன் செயலாளர் ஜெயக்குமார் பொருளாளர் துரைநாயகம் மற்றும் அவ் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.
0 commentaires :
Post a Comment