11/12/2015

சந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் எடுக்க யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
கைதிகள் விடுதலையை வைத்து நாடகமாடிய கூட்டமைப்பினர் இறுதியில் அவர்களை கைவிட்டுள்ளனர்.
 தமிழ் மக்களை பற்றிய பிரக்ஞைகளுமின்றி எழுந்தமானமாக அரசியல் செய்யும் இந்த கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்க தகுதியற்றவர்களாகும்.இதனூடாக இந்த நிலையை எதிர்கொள்ள எந்தவித திட்டமிடல்களோ சிவில் சமூக கட்டமைப்புக்களோ  இவர்களிடம் இருக்கவில்லை என்பது அம்பலமாகின்றது.

குறித்த கைதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டாலும் பிணை நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படாததால் மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். 

0 commentaires :

Post a Comment