11/01/2015

ரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு

Afficher l'image d'origine

ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


சினாயில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் குழந்தைகள் உள்பட 224 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
217 பயணிகள், 7 விமானிகள் உள்பட 224 பேருடன், எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பெர்க்கிற்கு மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஓஎக-9268 என்ற அ-321 ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் சினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது  விபத்திற்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணித்த 17 குழந்தைகள் உள்பட 224 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவை சேர்நதவர்கள்.
இந்த கோர விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்டு தலைவர்களும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்தை ரஷ்யாவின் மிகப்பெரும் சோக சம்பவமாக குறிப்பிடும் வகையில், நாளை (நவம்பர்.1) தேசிய துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.224 பேப் பலியான ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

0 commentaires :

Post a Comment