மாத்தளை பிட்டகத்தையில் மண்சரிவினால் பாதிப்புற்ற மக்களுக்கு அமைக்கபட்ட 20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம்' இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் அலுவிகார, ரோஹிணி கவிரத்ன, மற்றும் பல அரசியல் பிரமுகர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.
இந்த வீடமைப்புக்கான ஆரம்ப கட்ட பணிகளுக்காக ஆறு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் இணைப்பு செயலாளராக சென்றிருந்த போது மக்கள் எவ்வித நம்பிக்கையும் அற்றவர்களாக இருந்தனர். 1982 ஆம் ஆண்டு முதல் இங்கு மண்சரிவு தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்துள்ளது. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களும் இங்கு வந்து சென்றுள்ளாராம். அப்போதெல்லாம் நடக்காததா இப்போது நடக்கப்போகின்றது என வெறுப்புன்றிருந்த மக்களுக்கு இன்று கனவு நனவாகியிருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று அமைச்சர் வருகை தர முடியாத நிலையில் நானே அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தேன். அப்படி ஒரு வாய்ப்பினை வழங்கியதற்காக அமைச்சருக்கு இன்று நன்றி தெரிவித்தேன்.
எனது கரங்களில் அடிக்கல் நாட்டிய அந்த இடங்களில் 200 நாள் இடைவெளிக்குள் 20 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. அதற்கு அமர்ர்.T .ராமானுஜம் அவர்களின் பெயரைச் சூட்ட கிடைத்தமை இரட்டிப்பு மகிழ்ச்சி. அன்னாரது அரிய நிழற்படம் ஒன்றும் இன்று கிடைக்கப்பெற்றது.
1947 ஆம் நாடாளுமன்ற அவையில் கண்டி மாவட்டத்திலுருந்து பிரதிநிதித்துவம் செய்த அமர்ர் T. ராமானுஜம் அவர்களின் மகன் கலாநிதி. பிரதாப் ராமானுஜம் முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு செயலாளர் பதவி வகித்ததோடு, தற்போது பொது சேவை ஆணைக்குழுவில் மலையக மக்களின் பிரதிநிதியாகவும் உள்ளார் எனவும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது நினைவு கூர்ந்தேன்
நன்றி *முகனூல் மல்லியப்பு சந்தி திலகர்
0 commentaires :
Post a Comment