எப்போதும் நடக்ககூடிய காரியங்களை விட நடக்கமுடியாத காரியங்களை பேசுவதிலேயே ஒரு தில்லு இருக்கிறது. அதிலும் இந்த மாயமான் விளையாட்டு தமிழரசுகட்சியினருக்கு கைவந்த கலையாகும்.எமது மக்களுக்கும் இந்த ஸ்ரண்ட் அரசியலே நன்றாக பிடிக்கும்..
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு ஸ்ரண்ட் தமிழரசு கட்சியினரால் எடுத்துவிடப்படும்.கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு "ஆறுமாதத்தில் அரசியல் தீர்வு" எடுத்து விடப்பட்டது. அதில் மூன்று மாதம் கடந்து விட்டது.மக்களும் அதை மறந்து விட்டனர்.அதை தொடர்ந்து "அரசியல் கைதிகளின் பொதுமன்னிப்பு" விடயம். அது ரணிலிடம் வேகாது என்று தெரிந்தும் அதை வைத்து சிறிது காலத்தை ஓட்டினர். அதுவும் கானல் நீராகிவிட்டது. ஏகாதிபத்திய விசுவாச கூட்டாளிகளுடன் இணைந்து மக்களுக்கு செய்யும் துரோகத்தனத்தையும் தமது கையாலாகாதனத்தையும் மறைக்க உடனடியாக ஊடகங்களை திசைதிருப்பவேண்டிய தேவை எழுந்துள்ளது.
அந்த வரிசையில் இப்போ உள்ளுராட்சி தேர்தலும் அண்மிக்கிறது. சம்பந்தர் தனது அடுத்த மாயமானை அவிழ்த்து விட்டுள்ளார். அதுதான் வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்புகள் என்பதாகும். இனி ஊடகங்கள் ஒரு "லட்சம் வேலைவாய்ப்பு" கதையளக்க தொடங்கும்.வேலையின்றி அலையும் இளம் பராயத்தினர் அனைவரும் தமிழரசு கட்சி வட்டாரங்களை வால்பிடிக்க முண்டியடிப்பார்கள்... ஒரு லட்சத்தில் ஒருவராக நாமிருக்க கூடாதா? என்று உள்ளுராட்சி தேர்தலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு பெருகும். ஆனால் பாவம் மக்கள் ரணிலிடமிருந்து பத்து வேலை வாய்ப்புகளை இவர்கள் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. ஜீ-- ஹும்பா-ஆம் இது வெறும் ஜீ-- ஹும்பா-விளையாட்டுத்தான்.
மீன் பாடும் தேனாடான்
0 commentaires :
Post a Comment