10/29/2015

அதிசயம் ஆனால் உண்மை! துரையப்பா கொலைக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு புலனாய்வு தகவல்கள்


Afficher l'image d'origineஅதிசயம் ஆனால் உண்மை! துரையப்பா கொலைக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு புலனாய்வு தகவல்கள் என்று விரைவில் செய்தி வெளிவரும். முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதிலிருந்து  மாபியா ஊடகங்களான தமிழ் வின், இனியொரு, ஜேவிபி நியுஸ் போன்றவைக்கும் அரச புலனாய்வு துறைக்கும் நெருக்கமோ நெருக்கம்.பிள்ளையானின் ஒவ்வொரு வாக்குமூலங்களும் தமக்கு மட்டும் தெரிவிக்கப்படுவது போன்ற செய்திகளை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது.

ஒருவர்மீது குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவரை நிரபராதியாகவே கணிக்க வேண்டும்,அவர் நிரபராதியாகவே நடத்தப்படவும் வேண்டும் என்பதே நியதியாகும்.அது சட்டத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டதொன்றாகும்.ஆனால் குற்ற புலனாய்வு துறையினர் இன்னும் உத்தியோக பூர்வமாக சந்திரகாந்தன் மீதான குற்ற சாட்டு என்ன என்பதை அறிவிக்கவோ அல்லது ஏதாவது ஒரு குற்றச்சாட்டின் பெயரில் சந்திரகாந்தன்  மீது வழக்கு தாக்கல் செய்யவோ கூட இல்லை. அப்படியானதொரு நிலையில் வெறும் விசாரணையின் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும்   முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் மீது தமிழ் ஊடகங்கள் சரமாரியாக பல கொலை குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.போதாமைக்கு பிள்ளையானே அந்த கொலைக்கு வாக்குமூலம் கொடுத்துவிட்டார், இந்த கொலைக்கு வாக்குமூலம் கொடுத்துவிட்டார் என்று தமக்கு விரும்பியபடியெல்லாம் செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

செய்திஊடகங்களுக்கு இருக்க வேண்டிய தர்மம்,ஒழுங்கு,சமூகப்பொறுப்பு  போன்றவற்றை  நாம் இந்த மாபியா ஊடகங்களிடம் எதிர்பார்க்க முடியாதுதான். எந்த பழிவாங்கும் நோக்கத்தின் பொருட்டு  ரணில்- தமிழ்தேசிய கூட்டமைப்பு கூட்டு அரசாங்கத்தால் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டாரோ அந்த பழிவாங்கும் படல மனோநிலையில் இருந்தே இந்த செய்திகள் பிறக்கின்றன.போகின்ற போக்கில் அல்பிரட் துரையப்பாவை கொல்லுவதற்கும் பிள்ளையான் சதிசெய்தார் என்று செய்திகள் வரலாம். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிள்ளையானின் அரசியல் எதிர்காலத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் இந்த ஊடகங்கள் ஈடுபடுகின்றன என்பதே உண்மையாகும்.

0 commentaires :

Post a Comment