10/13/2015

| |

ஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையில் நடாத்தப்பட்ட "வெருகல் படுகொலை" விசாரிக்கப்பட வேண்டும்


2004 ஏப்ரல் மாதம்.அதுவொரு சமாதான காலம்
Résultat de recherche d'images pour "sampanthan"வெருகலாற்று படுக்கையில் யுத்த பேரிகை முழங்கியது.சரணடைந்த கிழக்கு போராளிகள் மீது படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது.ஐயோ அண்ணா வேண்டாம் வேண்டாம் என்று பெண்போராளிகளின் அவலக்குரல் கதிரவெளி கடலோரமெங்கும் எதிரொலித்தது.எமது பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டார்கள்.சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர் பறிக்கப்பட்டது. சித்திரை வெயிலில் வெம்பி வெடித்து கதிரவெளி கடற்கரை மணலெங்கும் எமது போராளிகளின் உடலங்கள் நாற்றமெடுத்துகிடந்தன.அவற்றை அடக்கம்செய்ய கூடாதென்ற கட்டளை வன்னிபுலிகளால் விடுக்கப்பட்டிருந்தது. 
இது எதிரி செய்த படுகொலையல்ல.நாம் யாரை சொந்த தமிழர்கள் என்று நம்பினோமோ, எமது தலைவர்கள் என்றோமோ, எம்மை வழிநடாத்துவார்கள், எமக்கு விடுதலை வாங்கி தருவார்கள் என்று நம்பியிருந்தோமோ அவர்களால் நடாத்தப்பட்ட படுகொலைதான் இது.ஆம் தமிழீழ விடுதலை புலிகள் செய்த படுகொலை அது. படைகொண்டு தீர்வுக்கான வடக்கும் கிழக்கும் என்ன அந்நிய தேசங்களா? யார் இந்த அநியாயத்தை பற்றி கேள்விஎழுப்பினார்கள்?
2004ம் ஆண்டு இந்த வெருகல் படுகொலை நடந்தபோது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது..அதுமட்டுமா நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்புகுழு கடமையிலிருந்ததே அப்படியிருக்க எப்படி இந்த படுகொலை சாத்தியமாகும்.வன்னியிலிருந்து ஒமந்தையூடாகவும் கடல் வழியாகவும் எப்படி வன்னிபுலிகள் இந்த வாகரை பிரதேசம்வரை ஆயுதங்கள் சகிதம் வந்து சேர்ந்தனர்? இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்? அன்றைய அரசுடன் வன்னிபுலிகளுக்காக தூது சென்ற தமிழ் தேசிய தலைவர்கள் யார்? இந்த உண்மைகள் அம்பலமாக்கபடவேண்டும்.எமது மக்களுக்கு நீதி வழங்க படவேண்டும்.இன்று யுத்தகுற்றம் யுத்தகுற்றம் என்கின்றார்களே? இது யுத்தநிறுத்தத்தின் பொது நடந்த படுகொலை அல்லவா? இது அதைவிட குற்றமாகாதா? ஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையில் நடாத்தப்பட்ட இந்த வெருகல் படுகொலை ஒரு மாபெரும் மனித உரிமை மீறல் ஆகும்.
வெருகல்படுகொலையின் சூத்திரதாரி சம்பந்தன் விசாரிக்கபட வேண்டும் 
2004 தேர்தலின் முடிவுகளில் தொங்கு பாராளுமன்றம் அமைய நேரிட்டால் சந்திரிகா அம்மையாருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்ற உறுதியை அதற்கு கைமாறாக வன்னியிலிருந்து ஓமந்தை வழியாகவும் புலிகள் )சமாதான ஒப்பந்தத்துக்கு மாறாக) கிழக்கு நோக்கி பயணிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். என்கின்ற பேரம்பேசலில் தமிழ் செல்வனுக்காக சம்பந்தரே ஈடுபட்டார். இதன்படி வெருகல்படுகொலையின் சூத்திரதாரி சம்பந்தன் விசாரிக்கப்படவேண்டும்.   
Résultat de recherche d'images pour "erik solheim"எரிக் சோல்கைம் விசாரிக்கப்படவேண்டும்.
நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்புகுழு  நிலைமையை புரிந்து கொண்டு வன்னிப்புலிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கியது."தற்காலிகமாக கிழக்கு மாகாணத்தை விட்டு விலகுகின்றோம்" என்று அறிவித்துவிட்டு வெளியேறியது.சமாதானத்துக்கு வந்தவர்கள் படுகொலை நிகழாமல் தடுக்கவேண்டிய தமது பொறுப்பினை தவறவிட்டனர்.அதுமட்டுமன்றி   கிழக்கை விட்டு வெளியேறியதன் ஊடாக வெருகல் படுகொலை நிகழ துணைபோயினர். இதற்காக எரிக் சோல்கைம் விசாரிக்கப்படவேண்டும்.அவர் தனது பொறுப்பு சொல்லலில் இருந்து தப்பிக்க முடியாது.