- தொண்ணூறு நாட்களல்ல ஒன்பது வருடங்கள் தடுத்து சிறை வைத்தாலும் இலட்சியத்துக்காகவே போராடுவோம்-.
தாய் நாட்டையும், கிழக்கு மக்களையும் காப்பாற்றி இணக்கப்பாட்டு அரசியலினூடாக கிழக்கு மண்ணை கட்டியெழுப்பிய பெருமை எமக்குண்டு. வடக்கு கிழக்கில் இறுதி யுத்தம் நடந்தபோதும் வடக்கில் மட்டும் கொத்து கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
கிழக்கில் மட்டும் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் உட்பட பொதுமக்கள் காப்பாற்றப்பட்டது அண்ணன் பிள்ளையானின் சிறந்த வழிகாட்டலினாலே. தமிழ்தேசிய கூட்டமைப்பு நினைத்திருந்தால் வடக்கில் இறுதி யுத்தத்தினை தடுத்து மக்களை காப்பாற்றியிருக்கலாம். மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் குடும்பங்களை வெளிநாட்டில் வைத்து விட்டு தாங்கள் கொழும்பில் இருந்து கொண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தினை பொழுது போக்கு பார்த்த போலித் தலைவர்களே. தனது இனத்திற்காக களத்தில் நின்று போராடியவன் துரோகியா... அல்லது தனது இனம் அழியும் போது வேடிக்கை பார்த்தவர்கள் துரோகியா... என மக்கள் சிந்திக்க வேண்டிய காலமிது.
அறுபது வருட அரசியல் அனுபவம் கொண்ட தமிழ் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாத கிழக்கு மாகாண சபையிலும், மத்திய அரசிலும் பங்காளியாகி நல்லாட்சி என்று கூறிக்கொண்டு சாதித்தது, அரசியல் பழிவாங்கல் ஊடாக TMVP கட்சித்தலைவர்களை கைது செய்தது மட்டுமே. மாறாக கடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை நாங்கள் கையாண்டிருந்தால் கூட்டமைப்பு உறுப்பினர்களால் செய்யப்பட்ட குற்றங்களுக்காக அவர்களை தடுத்து வைப்பதற்கு சிறைக்கூடங்கள் போதாமல் இருந்திருக்கும். ஆனால் அண்ணன் பிள்ளையான் தமிழ் மக்களின் விடிவிற்காக போராடினாரே தவிர எவரையும் பழிவாங்கவில்லை.
இவர்களின் அரசியல் பழிவாங்கல் மூலம் எமது தலைவர் தொண்ணூறு நாட்களல்ல ஒன்பது வருடங்கள் தடுத்து வைத்தாலும் குற்றமற்றவராய் வெளியே வருவார். தலைவரின் இறுதி மூச்சுவரை கிழக்கு மக்களின் விடுதலைக்காகவே போராடுவார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நன்றி குமாரசிறி முகனூல்
0 commentaires :
Post a Comment