மாலைதீவில் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவருக்கு கல் லெறிந்து கொல்ல வழங்கப்பட்ட தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அகற்றியுள்ளது.
திருமண உறவு இன்றி குழந்தை பெற்றுக்கொண்டிருக்கும் குறித்த பெண் நீதவான் நீதிமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றங்காணப்பட் டார். எனினும் ஞாயிறு பின்னேரத் தில் அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அகற்றிக்கொண்டுள்ளது. இந்த தீர்ப்பு சட்ட செயல்முறையை மீறுவதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் மாலைதீவில் இதற்கு முன்னர் திருமணத்திற்கு அப்பால் பாலுறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கசையடி தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்பட் டுள்ளது. எனினும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மாலைதீவில் நடை முறைப்படுத்தப்பட்டதில்லை என்ற நிலையில் இந்த தண்டனை தீர்ப்புக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.
2013 ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் மீது திருமணத்திற்கு அப்பால் பாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 100 கசையடி தண்டனை வழங் கப்பட்டது. சர்வதேச அளவில் விமர்சனங்கள் ஏற்பட்ட நிலையில் அந்த தண்ட னையை அகற்றிக் கொண்ட உச்ச நீதிமன்றம், சிறுமி மீது தவறாக குற்றச்சாட்டு சமத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டது.