10/18/2015

| |

பாரிஸில் டேவிட் ஐயா அவர்களின் நினைவுகூட்டம்

காந்தீயம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் ஊடாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக வாழ் மக்களின் இருப்பை ஒரு தூர நோக்குடன் சிந்தித்து செயலாற்றிய டேவிட் ஐயா அவர்களின் கடந்தகால வரலாற்று சேவைகளை அதாவது ஆயுத போராட்டத்துக்கு முன்னர், அவரால் முன்னெடுக்கப்பட்ட தூரநோக்குடைய சிந்தனைகளை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ளும் முகமாக பாரிஸில்  சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 

இருபதாம் நூற்றாண்டின் காந்தீயம் என்ற அமைப்புடன் தமிழ்ப்பேசும் மக்களின் எதிர்கால இருப்பை பற்றிய சிந்தனையுடன் தனது இறுதிகாலம்வரை வாழ்ந்த அவரின் சிறப்பை, அவரை மறந்து வாழும் தமிழர்களுக்கு நினைவூட்டும் நிகழ்வை சிறப்பாக செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன,   விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.