குடியேறிகளின் வருகைக்கு எதிராக ஹங்கேரி தனது எல்லையை மூடியதை அடுத்து குரோஷியா மற்றும் செர்பியாவில் இருந்து ஸ்லோவேனிய நாட்டுக்கு படையெடுக்கும் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்துவது குறித்து ஸ்லோவே னியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறிய ஐரோப்பிய ஒன்றிய நாடான ஸ்லோவேனி யாவுக்கு கடந்த சனிக்கிழமை மாத்திரம் 3000க்கும் அதிகமான குடியேறிகள் வந்ததை அடுத்து கடந்த ஞாயிறன்று செர்பியாவில் இருந்து 1,800 குடியேறி களுடன் வந்த ரயிலை நாட்டுக்குள் வர ஸ்லோ வேனியா மறுத்துள்ளது.
ஸ்லோவேனியா நாளொன்றுக்கு 5000 குடியேறி களை ஏற்க வேண்டும் என்று அண்டை நாடான குரோஷியா கேட்டுக் கொண்ட போதும் அதில் பாதி அளவையே ஏற்க முடியும் என்று ஸ்லோவேனியா குறிப்பிட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பாவை நோக்கி பயணிக்கும் குடி யேறிகள் குரோஷியாவின் செர்பிய எல்லையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் குடியேறிக ளுக்கான இடைத்தங்கல் முகாம்கள் ஒருசில தினங் களில் நிரம்பி விடும் என்று குரோ'pய எச்சரித் துள்ளது.
கடந்த ஞாயிறாகும்போது குரோஷியாவின் செர் பிய எல்லையில் கடும் குளிருக்கு மத்தியில் குடி யேறிகளின் பஸ் வண்டிகள் சிக்கித்தவித்தன. குறிப் பாக ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவுக்கு இடை யிலான, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதியில், மழை மற்றும் கடுங்குளிரில், தங்க இடமில்லாமல், குழந்தைகள் உட்பட பல குடும் பங்கள் சிக்கியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரி தனது குரோஷியாவுடனான தெற்கு எல்லையை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் மூடியது.
பிரதானமாக முஸ்லிம் குடியேறிகளின் வருகை ஐரோப்பாவின் சுபீட்சம், பாது காப்பு மற்றும் கிறிஸ் தவ பெறுமானங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஹங்கேரியின் வலதுசாரி அரசு குற்றம்சாட்டுகிறது.
யுத்தம், வறுமை காரண மாக மத்திய கிழக்கு, ஆபி ரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து படகுகள் மூலம் ஐரோப்பாவுக்கு படையெ டுக்கும் குடியேறிகளின் எண் ணிக்கை இந்த ஆண்டில் உச்சத்தை எட்டியுள்ளது.
இதில் ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனியை நோக்கி செல்லும் குடியேறிகளை தடுக்கப்போவதில்லை என்று குரோஷிய மற்றும் ஸ்லோவே னியா உறுதியளித்துள்ளன.
எனினும் கிறீஸ் ஊடாக மசிடோனியா மற்றும் செர்பியா வுக்கு நாளொன்றுக்கு சுமார் 5000 குடியேறிகள் வரும் நிலையில் நாளுக்கு 2,500 பேரையே அனுமதிக்க முடியும் என்று ஸ்லோவே னிய கட்டுப்பாடு விதித்து வருகிறது.
இந்நிலையில் ஸ்லோவேனியா ஊடான குடியேறி களின் புதிய பாதை அதிகம் துன்பம் கொண்டது என்று ஐ.நா. அகதிகளுக்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது.