சட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா? கேலிகூத்தாகும் பிரசாந்தன் கைது எழுப்பும் கேள்விகள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று 23/10/2015 காலையில் காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரகாந்தன் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியில் செயலாளரும் போலி குற்றச்சாட்டின் பெயரில் கைதாகியுள்ளார்.
பிரசாந்தன் ஒரு கொலை சம்பவத்துடன் இணைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்றதும் முன்னாள் போராளிகள்,வன்முறையாளர்கள் என்கின்ற,ஆயுத கலாச்சாரத்தில் வந்தோர் என்கின்ற விம்பங்கள் எழுவது இயல்பு.அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு- ரணில் கூட்டரசாங்கம் தனது பழிவாங்கலை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிமீது மீது திட்டமிட்ட வகையில் தொடருகின்றது. இதன் காரணமாகவே கட்சியின் தலைவரை தொடர்ந்து செயலாளரும் கொலைக்குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் கைதாகியுள்ளார்.
பிரசாந்தன் தனது மேற்படிப்புடன் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அதிசிறந்த கள செயற்பாட்டாளர்களில் ஒருவராக தேசிய ரீதியில் மதிக்கப்படுபவர்.அவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சட்டரீதியாக பதிசெய்யப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்ட வேளையில் முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தலுடனேயே அரசியலுக்கு வந்தவர். தனது முதலாவது வரவிலிருந்து கட்சிக்காக அவர் ஆற்றியவரும் நேர்மையான பணிகள் காரணமாக கட்சியில் முதலாவது தேசிய மாநாட்டில் கட்சியின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டவர். வன்முறைகளுக்கும் பிரசாந்தனுக்கும் எள்ளளவும் சம்பந்தமற்றவர்.புலால் உண்பதே பாவம் என்று கருதும் சைவ உணவுக்காரன்.ஆயுதமொன்றை தூக்கிகூட அறியாத இந்த பிரசாந்தன் மீது இப்படியாததொரு குற்றச்சாட்டா? இதிலிருந்து முன்னாள் முதலமைச்சரின் கைது தொடக்கம் இந்த கைதுகள் திட்டமிடப்பட்ட கூட்டமைப்பு -ரணில் அரசாங்கத்தினது கூட்டு சதி என்பது புலனாகின்றது.
ஆனாலும் இனி அவரைப்பற்றி புகலிட புலி பினாமிகளின் புலனாய்வு தகவல்கள் சூடு பறக்கும்.
கேப்பிட்டிபோலாவில் கிளைமோர் வைத்தவர்,சுதந்திரதின குண்டுவேடிப்பின் சூத்திரதாரி,மைத்திரியை கொல்ல மையங்கனையில் காத்திருந்தவர்,என்கிற புலி மாபியாக்களின் ஊடகங்கள் ஊளையிடத்தொடங்கும்.
மீன்பாடும் தேனாடான்
0 commentaires :
Post a Comment