முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் வாக்குமூலங்கள் தொடர்பாக ஐரோப்பாவிலுள்ள புலி மாபியா ஊடகங்களால் திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டுவரும் வதந்திகளை நம்பி கருத்து தெரிவித்துள்ளார் அசாத் சாலி.அவரின் இவ்வுரை குறித்து பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்டஇ ஒரு சந்தேக நபர் வெளியிட்டும் தகவல்களை காவற்துறையின் பொறுப்புமிக்க அதிகாரிக்கே ஊடகங்களுக்கு வழங்க முடியும்.
அப்படியான தகவல்களை அசாத் சாலிக்கு வெளியிட முடியாது எனதெரிவித்துள்ளதோடு,குறிப்பிட்ட,வதந்திகளை மறுத்துரைத்துள்ளார்..
முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் வாக்குமூலங்கள் தொடர்பாக திட்டமிடப்பட்ட வதந்திகள்பரவலாக வெளிவருகின்றன.தமிழ்வின், இனியொரு,ஜே.வி.பி நியூஸ், என்றும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கூட வித்தியாசம் தெரியாது தமிழ் மக்களை பொய்களாலும் புரட்டுகளாலும் தவறாக வழிநடத்திவருகின்ற மாபியா இணையத்தளங்கள் இவ்வாறான செய்திகளை பரப்பிவருகின்றன. குற்றபுலனாய்வு துறையினரின் விசாரணைகள் பற்றி தகுதி வாழ்ந்த அதிகாரிகள் யாரும் இதுவரை எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையிலேயே இவ்வாறான செய்திகளை பரப்பிவருகின்றன. கடந்தகாலங்களில் இறுதி யுத்தத்தின் போது "தலைவர் உள்ளுக்க விட்டடிப்பார்" "வெளியே விட்டடிப்பார்"என்றுதீர்க்கதரிசனம் சொல்லி மக்களை ஆயிரக்கணக்கில் காவுகொடுத்த இந்த மாபியாக்களுக்கு ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மக்களை நம்பவைப்பதன் ஊடாக தங்கள் விருப்பு வெறுப்புக்களை செய்திகளாக்கி வருகின்றனர்.
இச்செய்திகளை நம்பி இலங்கையிலுள்ள அரசியல் வாதிகள் கூட அவற்றினை மேற்கோள் காட்டி பேசிவருவது கோமாளித்தனமானது.