10/19/2015

| |

எல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளி வருவேன்

எல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளிவருவேன்-முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் 


Afficher l'image d'origine

எல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளி வருவேன் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சனியன்று கொழும்பு பிரதான நீதிமன்றுக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் கொண்டுவந்த போதே அவர் மேற்படி தெரிவித்தார்.
*இருபத்தைந்து வருடகாலம் அழிந்து சிதைந்து துருப்பிடித்து கிடந்த மாகாண  சபை முறைமைக்கு மீண்டும் உயிர் கொடுத்தவன். 

* கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக மீட்சிக்கு பாடுபட்டதுடன் பல்லாயிரம் இளஞர்களை  ஜனநாயக பாதையில்  பயணிக்க நல்வழிப்படுத்தியவன் நான்.

*எமது மாகாணத்தை பிரமாண்டமாக அபிவிருத்தி செய்ததுடன் எமது மக்களின் அமைதியான வாழ்வுக்கு என்னாலான அனைத்தையும் செய்திருக்கின்றேன்.

*கிழக்கில் முப்பது வருட காலமாக இன முரண்பாடுகளால் சீரழிந்து கிடைத்த மூவின மக்களையும் ஒன்றிணைத்து ஐக்கியப்படுத்தியதுடன் அனைவருக்கும் பாரபட்சமற்ற ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தி காட்டியவன் நான்.

*அனைத்துக்கும் மேலாக ஊழலற்ற ஒரு நிர்வாகத்துக்கு முன்மாதிரியாக எனது ஆட்சிக்காலம் திகழ்ந்தது என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.

இந்த நிலையில் தான் என்மீது கொலை குற்றசாட்டு சதிமுயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.இது ஒரு அபாண்டமான குற்றச்சட்டாகும்.
இந்த நல்லாட்சியில் நீதியான விசாரணைகள் நடைபெறும் என்று எண்ணுகின்றேன்.அப்போது எந்தவித குற்றமும் அற்றவனாக  வெளியே வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.