10/11/2015

| |

பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மாரடைப்பால் காலமானார்

 பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றார்.