பிரான்ஸின் பாரிஸ் நகரில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. பாரிஸ் நகரில் தமிழரின் வியாபார ஸ்தலங்கள் நிறைந்து காணப்படும் லாச்சப்பல் என்னுமிடத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஜனா மீது புலிகள் தாக்குதல் முயற்சியிலீடுபட்டுள்ளனர்.
இன்று வெள்ளியன்று மாலை 4 மணியளவில் (23-rue de cail, Paris- 10ல் அமைந்துள்ள) இந்திரா ரெஸ்ரரொண்ட் என்றழைக்கப்படும் தேனீர் சாலையில் டெலோ அமைப்பினருடனான மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து வருகைதந்த டெலோ தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் கோடீஸ்வரன்இ மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் போன்றோர் பங்கெடுத்துள்ளனர்.
மேற்படி கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த கோபி தலைமையிலான புலிகளின் கோஷ்டி ஒன்று மண்டப வாசலில் நின்றுகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஜானாவுக்கெதிரானதிரான பழிச்சொற்களுடன் கோசங்களை எழுப்பினர். அவ்வேளை வர்த்தக சங்கத்தலைவரான பாஸ்கரன் வெளியே சென்று அவர்களை அமைதியாக உள்ளே வந்து தங்கள் கேள்விகளை எழுப்புமாறு கேட்டுக்கொண்டார்.அதன் படி உள்ளே வந்த புலிகள் ஜனாவை சூழ்ந்து கொண்டு வன்முறையாக நடந்து கொள்ள முயன்ற போது கூட்டத்தில் இருந்தவர்களால் மண்டபத்தை விட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டனர்.
மீண்டும் மண்டப வாசலில் நின்டு கொண்டு ஜனா Teloவில் செயற்பட்ட காலங்களில் புலிகளை கொன்றவன் என்றும் அதற்கு மன்னிப்பே கிடையாது என்றும் கோஷமிட்டு "ஜனா கூட்டத்தை விட்டு வெளியேற்றப்படவேண்டும்" என்று தாக்குதலுக்கு தயாராக நின்றனர். உரிய நேரத்தில் பொலிசார் வருகை தந்தமையினால் ஜனா மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.எனினும் தாக்குதல்தாரிகளை கலைக்க பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்துமளவுக்கு நிலைமை கட்டுமீறி காணப்பட்டதாக லாச்சப்பல் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த வன்முறையில் ஈடுபட்டோர் புகலிட நாடுகளில் இயங்கும் புலிகளின் பிரிவுகளில் ஒன்றான "தலைமை செயலகம்"சார்ந்தவர்கள் ஆகும ்என அடையாளம் காணப்பட்டுள்ளனர். . இவர்களில் கோபி என்பவர் பொட்டம்மானின் புலனாய்வு துறையில் கடந்த காலங்களில் செயல்பட்டவராவார். ஒருசில வருடங்களுக்கு முன் முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சரான வரதராஜபெருமாள் பாரிஸுக்கு வருகை தந்தபோது அவருடன் பயணித்தவர்களை படங்கள் எடுத்து அவரை மிரட்டும்வண்ணம் சண்டித்தனம் பண்ணியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் இத்தாக்குதலில் ஈடுபட்ட முரளி என்பவர் புலிகளின் குரல் இணையதளத்தின் இயக்குனராகும்.

புலிகள் மாற்று இயக்கங்களை தடைசெய்து கொலைவெறி கொண்டலைந்த எண்பதுகளில் ஆயிரக்கணக்கான டெலோ உறுப்பினர்களும் அதன் தலைவர் ஸ்ரீ சபாரெட்ணமும் புலிகளால் கொன்றுவீசப்பட்ட கொடூரங்களின் பொறுப்பாளிகள் இன்று ஜனா மீது கொலை குற்றச்சாட்டு சொல்லுவது எவ்வகையில் பொருத்தம்?
(நன்றி தேனீ)