10/30/2015

மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !

kovan-2மிழக மக்களை மதுவால் கொல்லும் ஜெயா அரசின் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் நடத்திய போராட்டங்களை அறிவீர்கள். இதன் அங்கமாக இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. “மூடு டாஸ்மாக்கை மூடு, ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கானோரை சென்றடைந்தன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் இன்றளவும் இப்பாடல்கள் மிகப் பிரபலமாக மக்களால் கேட்கப்படுகின்றன. டாஸ்மாக்கை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இப்பாடல்களை வரவேற்றிருக்கின்றனர்.
மதுக்கடைகளை மூட மாட்டோம், தமிழக மக்களை வதைக்காமல் விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு ஏற்கனவே அடக்குமுறைகளை ஏவிவிட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்த மாணவர்கள் – மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்து பல நாட்கள் சிறையில் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இன்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது.
தமிழக மக்களை தாலியறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடு என்று சொல்வது தேசத்துரோகமா      நன்றி *வினவு

https://www.youtube.com/watch?v=yZLrn1dKOF8
»»  (மேலும்)

மாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்!

இன்று (29/10/2015) கொழும்பு வாட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்னால் நான்கு வருட கற்கை ஆண்டாக இருந்த தேசிய அதிஉயர் கணக்காளர் பட்டப்படிப்பினை (HNDA) மூன்றாண்டாக குறைத்து, இந்த கற்கை நெறியின் தராதரத்தை குறைத்துள்ளமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த மாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசானது தண்ணீர்த் தாங்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தியதுடன்; கலகம் அடக்கும் விசேட படையினரை ஏவி விரட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளது.
இதுவரை 39 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 40 ற்றும் அதிகமான மாணவர்கள் மோசமான அடிகாயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரு பிக்கு மாணவர்கள் மற்றும் ஜந்து பெண் மாணவிகள் அடங்கும்.
உலக நாணய நிதி நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கமைய மகிந்த அரசு இலவச கல்வியினை இல்லாதாக்கும் காரியத்தை முடுக்கி விட்டது. அதன் ஒரு அங்கமாக தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கி அவற்றை பல சலுகைகளுடன் ஆரம்பித்து வைத்து இலவச கல்விக்கு சங்கு ஊதும் பணியினை தொடங்கியது. இதனை எதிர்த்து தொடர்ச்சியாக பல போராட்டங்களை பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
நான்கு வருட கற்கை நெறியான  HNDA -Higher National Diploma in Management and Bachelor of Commerce, பட்டப்படிப்பினை மகிந்த அரசு மூன்று வருடங்களாக குறைத்ததுடன் கற்கும் பாடவிதான அளவினையும் குறைத்து இந்த பட்டப்படிப்பின் தராhதரத்தினை குறைத்திருந்தது. மேலும் இன்னும் ஒரு வருடம் மேலதிகமாக பட்டப்படிப்பின் பின்னர் கற்பதன் மூலம் சரியான தராதரத்தினை பெற்றும் கொள்ள முடியம் என அறிவித்திருந்தது. மேலதிக ஒரு வருட படிப்பினை கட்டணம் செலுத்தி படிக்கும் வண்ணம் மாற்றி அமைத்தது. இந்த நடவடிக்கை ஆனது மெல்ல மெல்ல இலவச கல்வியினை இல்லாதாக்கி அனைத்து பட்டப்படிப்புகளையும் விற்பனை செய்யும் நடவடிக்கையானதாகும்.  கல்வியை காசுக்கு விற்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடந்த மகிந்த அரசு காலத்தில் மாணவர்கள் பல பெரும் போராட்டங்களை நடாத்தி இருந்தமையும் மகிந்த அரசு அரச குண்டர் படையான ராணுவத்தினை ஏவி அந்தப் போராட்டங்களை அடக்க முனைந்ததுடன் பல மாணவர்களை போலி விபத்துக்களில் கொலை செய்ததுடன் மாணவர்களின் குடும்பத்தினரையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி இருந்தது. எனினும் மாணவர்கள் அஞ்சாது தொடர்ந்து போராடினர்.
மார்கழி 205,  22ம் திகதி மாணவர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன்னால் கல்விக்கான வெட்டுக்களுக்கு எதிராகவும் தனியார் பல்கலைக்கழக அனுமதிக்கு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக தடுத்து வைக்கப்பட்ட மாணவர்களின் விடுதலை கோரியும் பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தது. இதனை மகிந்த அரசு படையினரைக் கொண்டு வன்முறை மூலம் அடக்கியது.
மைத்திரியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார விளம்பரம் பல்கலைக்கழக மாணவர் மீதான மகிந்த அரசின் தாக்குதல் குறித்தான  புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை பயன்படுத்தி கல்வி உரிமையை பாதுகாத்து, ஜனநாயகத்தை உறுதி செய்வோம் என்று தொடங்கியது.
ஆனால் இன்று அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தேர்தல் கால வாக்குறுதிகளையும், உறுதிமொழிகளையும் காற்றிலே பறக்க விட்டு விட்டனர் “நல்லாட்சி” அரசினர். கல்விக் கொள்கையில் முந்தைய அரசின் கொள்கையே தொடந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. கல்வியினை ஒரு விற்பனை பண்டமாக மாற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த அழிவுச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் மீது முன்னைய அரசு போலவே இன்றைய “நல்லாட்சி” அரசும் தாக்குதல் நடாத்த தயங்கவில்லை.
»»  (மேலும்)

10/29/2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தலைமை-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Résultat de recherche d'images pour "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தலைமை தாங்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய முயற்சிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித பிளவுகளும் கிடையாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அது உண்மைதான் பொது தேர்தலில் சுதந்திரக் கட்சி   தோல்வி காண வேண்டும் ரணில் பிரதமராக வேண்டும் என்னும் ஏகாதிபத்தியங்களின் விருப்பத்துக்காக தலைமை தாங்கியவர்தானே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 
»»  (மேலும்)

அதிசயம் ஆனால் உண்மை! துரையப்பா கொலைக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு புலனாய்வு தகவல்கள்


Afficher l'image d'origineஅதிசயம் ஆனால் உண்மை! துரையப்பா கொலைக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு புலனாய்வு தகவல்கள் என்று விரைவில் செய்தி வெளிவரும். முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதிலிருந்து  மாபியா ஊடகங்களான தமிழ் வின், இனியொரு, ஜேவிபி நியுஸ் போன்றவைக்கும் அரச புலனாய்வு துறைக்கும் நெருக்கமோ நெருக்கம்.பிள்ளையானின் ஒவ்வொரு வாக்குமூலங்களும் தமக்கு மட்டும் தெரிவிக்கப்படுவது போன்ற செய்திகளை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது.

ஒருவர்மீது குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவரை நிரபராதியாகவே கணிக்க வேண்டும்,அவர் நிரபராதியாகவே நடத்தப்படவும் வேண்டும் என்பதே நியதியாகும்.அது சட்டத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டதொன்றாகும்.ஆனால் குற்ற புலனாய்வு துறையினர் இன்னும் உத்தியோக பூர்வமாக சந்திரகாந்தன் மீதான குற்ற சாட்டு என்ன என்பதை அறிவிக்கவோ அல்லது ஏதாவது ஒரு குற்றச்சாட்டின் பெயரில் சந்திரகாந்தன்  மீது வழக்கு தாக்கல் செய்யவோ கூட இல்லை. அப்படியானதொரு நிலையில் வெறும் விசாரணையின் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும்   முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் மீது தமிழ் ஊடகங்கள் சரமாரியாக பல கொலை குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.போதாமைக்கு பிள்ளையானே அந்த கொலைக்கு வாக்குமூலம் கொடுத்துவிட்டார், இந்த கொலைக்கு வாக்குமூலம் கொடுத்துவிட்டார் என்று தமக்கு விரும்பியபடியெல்லாம் செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

செய்திஊடகங்களுக்கு இருக்க வேண்டிய தர்மம்,ஒழுங்கு,சமூகப்பொறுப்பு  போன்றவற்றை  நாம் இந்த மாபியா ஊடகங்களிடம் எதிர்பார்க்க முடியாதுதான். எந்த பழிவாங்கும் நோக்கத்தின் பொருட்டு  ரணில்- தமிழ்தேசிய கூட்டமைப்பு கூட்டு அரசாங்கத்தால் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டாரோ அந்த பழிவாங்கும் படல மனோநிலையில் இருந்தே இந்த செய்திகள் பிறக்கின்றன.போகின்ற போக்கில் அல்பிரட் துரையப்பாவை கொல்லுவதற்கும் பிள்ளையான் சதிசெய்தார் என்று செய்திகள் வரலாம். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிள்ளையானின் அரசியல் எதிர்காலத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் இந்த ஊடகங்கள் ஈடுபடுகின்றன என்பதே உண்மையாகும்.
»»  (மேலும்)

சுவிஸ் இலக்கிய சந்திப்பு -2014 -சார்பான உதவிகள் மீரியபெத்த மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்று (29.10.2015) மீரியபெத்த மண் சரிவு அவலம் நடைபெற்று ஒருவருடமாகிறது. மண் சரிவால் பாதிக்கபட்ட மக்களில் பெரும் பான்மையானோர் இன்னமும் அகதிகள் போன்ற நிலையில் , நிரந்தர வாழ்விட வசதிகள் இல்லாமலேயே வந்து வருகின்றனர். இந்நிலையைக் கருத்திற் கொண்டு, கடந்த வருடம் சுவிஸ் -இலக்கிய சந்திப்பு 2014 இல் சேர்க்கப்பட்ட நிதி, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையின் அடிபடையில், அவர்களுக்கான அத்தியாவசிய தேவைக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்ய உபயோகிக்கப்பட்டது. அவ் உபகரணங்கள், அம்மக்களின் மத்தியில் அரசியல் மற்றும் சமூகப் பணியாற்றும் களப் பணியாளர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.இப்பணியை படிப்பகம் நிறுவனத்துடன் இணைந்து, சுவிஸ் இலக்கிய சந்திப்பு -2014 இக்கு பொறுப்பாக இருந்த பத்மபிரபா மகாலிங்கம் , புதுமைலோலன் மகாலிங்கம் மற்றும் தோழர்கள் செயற்படுத்தினார். படிப்பகம் நிறுவனம்,மலையாக செயற்பாட்டாளர்களுக்கும், இலக்கிய சந்திப்பு செயற்பாட்டாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது . 
»»  (மேலும்)

சர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்....!

கியூபாவில் வாழும் புரட்சியாளன் சே குவேராவின்
புதல்வியுடனான பேட்டி ...!
கேள்வி : 
மேற்குலகம் கியூபாவை ஒரு சர்வாதிகார நாடாகப் பார்க்கின்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
மேற்குலகில் இருப்பவர்களுக்கு ''சர்வாதிகாரம்'' என்றால் என்னவென்றே தெரியாது. எந்த சர்வாதிகாரியும் தனது மக்களை படிக்க வைக்கமாட்டான். ஏனென்றால், எந்தளவுக்கு மக்கள் அதிகமாக படிக்கிறார்களோ, அந்தளவுக்கு சுதந்திரமாக சிந்திப்பார்கள்.
எந்தவொரு சர்வாதிகாரியும் அனைவருக்கும் இலவசக்கல்வியை அறிமுகப்படுத்தமாட்டான்.... எப்படிப்பட்ட சர்வாதிகாரி தனது மக்கள் ஆரோக்கியமாக வாழவும், இலவசமாக கல்வி கற்கவும் விடுவான்....? எப்படிப்பட்ட சர்வாதிகாரி பிற உலக மக்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு தனது மக்களுக்கு போதிப்பான்....? கியூபாவில் அதுதான் நடக்கிறது.
ஒற்றுமை, மரியாதை, பிற மக்களின் மேல் அன்பு செலுத்துதல், மற்றவர்களின் நன்மைக்கான சுய அர்ப்பணிப்பு - இந்தக் கொள்கைகள் தான் கியூப மக்களுக்கு போதிக்கப்படுகின்றன. அதை எப்படி நீங்கள் சர்வாதிகாரத்துடன் முடிச்சுப் போடலாம்...?
»»  (மேலும்)

ரணில் -தமிழ் தேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்தொடங்குகின்றதா?

Afficher l'image d'origine
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 'தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்ததால் தான் அக்கைதிகள், தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை  நிறுத்தினார்கள், விடுதலைக்கு மாறாக, பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பு, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஜனாதிபதி, தாய்வானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் அவரை சந்திப்பதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எனினும், அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில்,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை,  உயர்மட்டக் குழுக் கூட்டமொன்று சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு நவம்பர் முதல் வார இறுதிக்குள் சட்டபூர்வமான முறையில் பிணை வழங்குவதற்கும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. 

அலரிமாளிகையில் நடைபெற்ற பிரதமர் தலைமையிலான விசேட கூட்டத்தில், சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பொலிஸ் மா அதிபர் என்.இலங்கக்கோன், பிரதி சட்ட மா அதிபர் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சமர்ப்பித்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், பிரதமர் தலைமையிலான கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனிடம் வினவியபோது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் செய்ய வேண்டிய கருமங்களை செய்வோம். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல் உயர் பீட உறுப்பினர்களிடம் கலந்துரையாடி வருகின்றோம். அது தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார். 

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் எப்போது கலந்துரையாடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. அது தொடர்பில் இப்போது எதுவும் கூறமுடியாது என்றார். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் அனைவருக்கும் அறியத்தருவோம் என்றும் அவர் கூறினார்.
»»  (மேலும்)

கொழும்பு அமெரிக்க தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்!




இன்று (28/10/15) நண்பகல் 12 மணி அளவில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதராலயத்திற்கு முன்பாக சிரியாவின் மீதான ஏகாதிபத்திய யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள மனித பேரவலத்தினை கண்டித்தும் கியூபா மீது அமெரிக்கா ஜக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்த பொருளாதார தடை நீடிப்பு தீர்மானத்திற்கு எதிராகவும் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
உலகம் இன்று ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. முதலாளித்தும் பெரும் இலாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டு கனிமங்கள் மற்றும் வளங்களை கொள்ளையிடுவதற்க்காக உலகம் முழுவதும் யுத்தத்தை விதைத்து, மக்களை கொன்று குவிப்பதுடன் அவர்களை அகதிகளாக நாடு நாடாக ஓட ஓட விட்டுள்ளது. மேலும் சொந்த நாட்டு மக்கள் மீது சொல்லொணாத வரிச் சுமைகளை சுமத்தியும் பொருட்களின் விலைகளை அதிகரித்தும் ஒட்டச் சுரண்டுகின்றது. பல்தேசியக் கம்பனிகள் எங்கும் எதிலும் முக்கை நுழைத்து கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. சுற்றுச்சூழல் பாரிய பாதிப்புக்கு உள்ளாகிய வண்ணமுள்ளது.
இலங்கையும் நவதாரளவாத பொருளாதாரத்தின் பிடிக்குள் இறுகி வருகின்றது. இதிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் நாம் ஒடுக்கப்படும், அடக்கப்படும் உலக மக்கள் அனைவருடனும் இணைந்து ஒன்று சேர்ந்து போராடினால் மாத்திரமே சுபீட்சமான வாழ்வு சாத்தியமாகும். அந்த வகையில் ஏகாதியத்தியங்களில் பிடியில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் சிரிய மக்களுக்காகவும், அமெரிக்க பொருளாதார தடை காரணமாக அல்லலுறும் கியூப மக்களிற்காகவும் இன்று இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

10/28/2015

கடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை நாங்கள் கையாண்டிருந்தால் கூட்டமைப்பு உறுப்பினர்களை தடுத்து வைப்பதற்கு சிறைக்கூடங்கள் போதாமல் இருந்திருக்கும்.

- தொண்ணூறு நாட்களல்ல ஒன்பது வருடங்கள் தடுத்து சிறை வைத்தாலும் இலட்சியத்துக்காகவே போராடுவோம்-.
Résultat de recherche d'images pour "tmvp logo"தாய் நாட்டையும், கிழக்கு மக்களையும் காப்பாற்றி இணக்கப்பாட்டு அரசியலினூடாக கிழக்கு மண்ணை கட்டியெழுப்பிய பெருமை எமக்குண்டு. வடக்கு கிழக்கில் இறுதி யுத்தம் நடந்தபோதும் வடக்கில் மட்டும் கொத்து கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 
கிழக்கில் மட்டும் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் உட்பட பொதுமக்கள் காப்பாற்றப்பட்டது அண்ணன் பிள்ளையானின் சிறந்த வழிகாட்டலினாலே. தமிழ்தேசிய கூட்டமைப்பு நினைத்திருந்தால் வடக்கில் இறுதி யுத்தத்தினை தடுத்து மக்களை காப்பாற்றியிருக்கலாம். மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் குடும்பங்களை வெளிநாட்டில் வைத்து விட்டு தாங்கள் கொழும்பில் இருந்து கொண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தினை பொழுது போக்கு பார்த்த போலித் தலைவர்களே. தனது இனத்திற்காக களத்தில் நின்று போராடியவன் துரோகியா... அல்லது தனது இனம் அழியும் போது வேடிக்கை பார்த்தவர்கள் துரோகியா... என மக்கள் சிந்திக்க வேண்டிய காலமிது.
 அறுபது வருட அரசியல் அனுபவம் கொண்ட தமிழ் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாத கிழக்கு மாகாண சபையிலும், மத்திய அரசிலும் பங்காளியாகி நல்லாட்சி என்று கூறிக்கொண்டு சாதித்தது, அரசியல் பழிவாங்கல் ஊடாக TMVP கட்சித்தலைவர்களை கைது செய்தது மட்டுமே. மாறாக கடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை நாங்கள் கையாண்டிருந்தால் கூட்டமைப்பு உறுப்பினர்களால் செய்யப்பட்ட குற்றங்களுக்காக அவர்களை தடுத்து வைப்பதற்கு சிறைக்கூடங்கள் போதாமல் இருந்திருக்கும். ஆனால் அண்ணன் பிள்ளையான் தமிழ் மக்களின் விடிவிற்காக போராடினாரே தவிர எவரையும் பழிவாங்கவில்லை. 
இவர்களின் அரசியல் பழிவாங்கல் மூலம் எமது தலைவர் தொண்ணூறு நாட்களல்ல ஒன்பது வருடங்கள் தடுத்து வைத்தாலும் குற்றமற்றவராய் வெளியே வருவார். தலைவரின் இறுதி மூச்சுவரை கிழக்கு மக்களின் விடுதலைக்காகவே போராடுவார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நன்றி குமாரசிறி முகனூல் 
»»  (மேலும்)

(BED) படுக்கையுடன் கூடிய பஸ் சேவை, கல்முனை – கொழும்பு – கல்முனை

Résultat de recherche d'images pour "bus lux"சம்மாந்துறை Sitheek Travels & Tours நிறுவனத்தினர் புதிதாக அறிமுகப்படுத்துகிறார்கள் கல்முனையிலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து கல்முனைக்கும் இருக்கைகளுடன் (BED) படுக்கையும் சேர்ந்த பதிய சொகுசு பஸ் சேவை.
கிழக்கில் இருந்து கொழும்புக்கு செல்வோரின் நன்மை கருதியே இப்புதிய சேவை ஆரம்பிக்கப்ட்டுள்ளதாகவும் இந்த சேவைக்கு குறைந்த கட்டணங்களே அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தினமும் இரவு 8.30 க்கு கல்முனையில் இருந்து புறப்பட்டு காலை 4.30 க்கு கொழும்பை சென்றடையும் எனவும் கூறப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கும், முன்கூட்டிய பதிவுகளுக்கும் கீழே உள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
»»  (மேலும்)

யாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்

Résultat de recherche d'images pour "யாழ்ப்பாண முஸ்லீம்கள்"இலங்கையின் வடமாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒரு லட்சத்துக்குக் கிட்டிய எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து 24 மணி நேர அவகாசத்தில் விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.
கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தைகள் என்பன நான்கு வருடங்கள் தொடர்ந்தன.
அப்போது வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களைப் பார்வையிவதற்கும் மீள்குடியேறுவதற்கும் அனுமதிக்கப்படும் என்ற விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தனர். ஆயினும் அவர்களுக்கான மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் அந்த வருட இறுதியிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 2006க்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமே இந்த மீள்குடியேறற் நடவடிக்கையில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆயினும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கான விசேட திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும், நாட்டில் அமைதி ஏற்பட்டதையடுத்து முஸ்லிம் குடும்பங்கள் தாங்களாகவே சொந்த இடங்களில் மீள்குடியேறியிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கான அரச உதவிகள் கிடைத்துள்ள போதிலும், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கான மீள்குடியேற்ற வேலைத் திட்டம் எதுவும் மேற்கொள்ளாத காரணத்தினால் இன்னும் பல குடும்பங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
»»  (மேலும்)

10/27/2015

கண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரியநேந்திரன்

Résultat de recherche d'images pour "அரியநேந்திரன்"மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் நடை பெற்று வருகின்றன. குருக்கள் மடம் விஸ்ணு ஆலயம் மற்றும் வாகனேரி விநாயகர் ஆலயம் என்பன திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் அரசியல் பழிவாங்கல்களும் இந்த தாக்குதல்களும் இணைந்து மக்களை இந்த நல்லாட்சிமீது நம்பிக்கை இழக்க செய்துவருகின்றன. 



கடந்த ஜனாதிபதி தேர்தலில் நல்லாட்சிக்காக தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கூறி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். ஆனால் தமிழ் மக்களிடம் இவர்கள் விதைத்த கனவுகள் எல்லாம் கானல் நீராக போய்  விட்டன. கேவலம் தமது அரசியல் பழிவாங்கலை மட்டும் ரணில்-கூட்டமைப்பு அரசாங்கம் செய்ய முடிந்திருக்கிறது. கிழக்கின் முதல்கட்சியான தமிழ் மக்கள் விடுதலை புலிகளை அழித்தொழிக்க பகிரதபிரயத்தனம்  செய்ய மட்டுமே இந்த ஆட்சிமாற்றம் பயன்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் மீண்டும் கிழக்கு பகுதியில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதனை தடுக்கவோ இதன் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ஏன் ரணில்-கூட்டமைப்பு அரசாங்கத்தால் முடியாது? மாகாணத்தில் கள்ள ஆட்சியும் மத்தியில் நல்லாட்சியும் செய்யும் கூட்டமைப்பினரே மக்களுக்கு பதில் கூற  கடமைப்பட்டவர்களாகும். நல்லாட்சி அரசாங்கம் என்கின்ற மாயையை  மக்களிடம் எடுத்து சென்ற இந்த கூட்டமைப்பினர்தான் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.
அதை விடுத்து நல்லாட்சி ஒன்று நடப்பதாக தெரிவிக்கப்படும் இக் கால கட்டத்திலும் இந்து ஆலயங்களுக்கு காவலாளிகள் தேவைப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியனேந்திரன் நீலிகண்ணீர்  வடிக்கின்றார். இது கண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரியநேந்திரன் அவர்களே! 



»»  (மேலும்)

த.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவு' -

Résultat de recherche d'images pour "விநாயகமூர்த்தி முரளிதரன்"இலங்கையின் பழமைவாய்ந்த அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, அரசியல் எதிர்காலப் பயணத்தினைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தமை தன்னுடைய தனிப்பட்ட முடிவே தவிர யாருடைய திணிப்பின் நிமிர்த்தமும் அறிவித்ததல்ல என கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளப் போவதாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனைவரும் முன்வரவேண்டும் எனவும், அப்படிச் சேர்வதற்காக தங்களுடைய கதவு எப்பொழுதும் திறந்திருக்கும் எனவும் ஆனந்தசங்கரி ஐயா தெரிவித்திருந்தார். இந்த அழைப்பின் அடிப்படையில், 2, 3 கட்டப் பேச்சுக்களை நடத்தியிருந்தோம். இந்தப் பேச்சுக்களில் திருப்தியான பதில்கள் கிடைத்திருந்தன. இருப்பினும், மத்திய குழுவினைக் கூட்டி - அவர்களின் ஆலோசனையினைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தனது முடிவினை அறிவிப்பதாக சங்கரி ஐயா என்னிடம் தெரிவித்திருந்தார். இதனை மோப்பம் பிடித்த சிலரினால், இப்பொழுதே நான் கட்சியில் இணைந்துவிட்டேன் என்பதுபோன்ற செய்தியினை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது பாரம்பரியம் மிக்க கட்சி. இக்கட்சியினூடாகத்தான் அமிர்தலிங்கமும் எதிர்க்கட்சித் தலைவராகினார். ஆனந்தசங்கரி ஐயாவும் தமிழ் மக்களைச் சுரண்டி வாழ நினைப்பவரில்லை. மக்களின் நன்மைக்காகவே குரல்கொடுத்து வந்திருக்கின்றார். ஆகையினால்தான், ஜனநாயகத்துக்காகக் குரல்கொடுக்கும் அக்கட்சியுடன் சேர்ந்து செயற்படும் எனது ஆசையினை அறிவித்திருந்தேன். இது, தமிழ் மக்களுக்கு எதிரான முடிவில்லை, மாறாக அவர்களைக் காப்பதற்காக எடுக்கப்பட்ட, என்னுடைய தனிப்பட்ட முடிவே.
»»  (மேலும்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இன்றைய விஜயம் இரத்து

Résultat de recherche d'images pour "மைத்திரிபால சிறிசேன"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இன்றைய விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  மிக மோசமான காலநிலை காரணமாகவே இவ்விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரை, மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயம், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் மட்டக்களப்பு புனித மரியாள் தேவலாயம் ஆகியவற்றுக்குச் சென்று பிரார்த்தனை மற்றும் சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. 
»»  (மேலும்)

10/26/2015

கருணா அம்மான் சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா?

Résultat de recherche d'images pour "கருணா அம்மான்"முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவர், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
»»  (மேலும்)

குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண்மை அகற்ற பரிந்துரை

குழந்தைகளிடம், பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆண்மை அகற்ற சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ், தமிழகத்தில் ஏழை மாணவர்கள் காப்பகம் ஒன்றுக்கு, 2011ல் வந்தார். அந்த காப்பகத்தில் இருந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை, படிக்க வைப்பதாக கூறி, டில்லிக்கு அழைத்துச் சென்றார். மேலும், மாணவனின் தாய்க்கு, பண உதவியும் செய்துள்ளார்.

டில்லி, ஒய்.எம்.சி.ஏ., விடுதியில், தங்கியிருந்த போது, மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, இயற்கைக்கு மாறாக உறவு கொண்டார். பின்னர், மாணவனை அங்கேயே விட்டு விட்டு, லண்டனுக்கு சென்று விட்டார்.பிறகு, அந்த மாணவன், சிலர் செய்த பண உதவியால், சென்னைக்கு திரும்பினான். மாணவனுக்கு நடந்த கொடுமையை அறிந்த, குழந்தைகள் நல அமைப்பு ஒன்று, போலீசில் புகார் செய்தது.

புகாரை பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், வில்லியம்ஸ் மீது குற்றம்சாட்டி, குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
வில்லியம்ஸ் மீது, கோர்ட், பிடிவாரன்ட் பிறப்பித்தது . இதன் அடிப்படையில், வில்லியம்சை, தேடப்படும் குற்றவாளி என, இன்டர்போல் என்கிற சர்வதேச போலீஸ் அறிவித்தது.
தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரன்டையும், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதையும், ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில், வில்லியம்ஸ் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'டில்லியில் நடந்த சம்பவத்துக்கு, தமிழக போலீசார், வழக்கு பதிவு செய்ய முடியாது, தமிழக கோர்ட்டுக்கு விசாரிக்கவும் அதிகாரம் இல்லை.
மாணவனிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. குழந்தைகள் நல அமைப்பு உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது' என கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:
நாட்டில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகரித்து வருகிறது, 2012ல், 38 ஆயிரத்து 172 வழக்குகளும், 2014ல், 89 ஆயிரத்து 423 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகமும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம், ஆண்மை அகற்றும், தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்
»»  (மேலும்)

தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பிரசாந்தனை எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வரை மேலும் தடுத்துவைக்க கட்டளையிடப்பட்டுள்ளது.

Afficher l'image d'origineதமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்  த லைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்கள் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு அரசுடன் பங்காளியாக இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் சூழ்ச்சியின் மூலம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் அரசியல் செயற்பாடுகளை கௌரவ பொதுச்செயலாளர் முன்னோக்கி கொண்டு சென்றவராகும் . 

இந்நிலையில் செயலாளரை முடக்கினால் கட்சியின் செயல்பாடுகள் உத்தியோக பூர்வமாக ஸ்தம்பிதமடையும்.TMVP கட்சியை கிழக்கு மாகாணத்திலிருந்து அழித்துவிடுவதற்காகவே இந்த சதி இடம்பெற்று வருகின்றது.எனவே கைது செய்யப்பட்டுள்ள கட்சியின் பொதுச்செயலாளரான பிரசாந்தனை எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வரை மேலும் தடுத்துவைக்க கட்டளையிடப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

மட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்

மட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்ட மட்டத்தில் புலமைப் பரிட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பாடுமீன் விருது வழங்கப்படவுள்ளது இது இவ்வாண்டிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்படுமென்று பிரான்ஸ் பாடுமீன் அமைப்பு தெரிவித்துள்ளது அத்துடன் விருது பெறும் மாணவர்களின் படம் தாங்கிய பெரிய பதாதை ஒன்றும் மட்டக்களப்பு நுழைவாயிலில் நிரந்தரமாக வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இவ்வாண்டிற்கான பாடுமீன் விருது நிகழ்வு எதிர்வரும் 30/10/2015 அன்று 2 மணிக்கு மட்/மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது ,இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக கலை பீட பீடாதிபதி டாக்டர் க .ராஜேந்திரம் கலந்து சிறப்பிக்கவுள்ளார்
சிறப்பு அதிதியாக வி .மனோகரன் (அம்பாறை உதவி நில ஆணையாளர்) மற்றும் உதவிப் கல்விப்பணிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்
»»  (மேலும்)

'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்' - விக்னேஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை வெளியிட்டிருக்கின்றார்.
பட்டப்படிப்பு முடிந்த பின்னர், பொறியியல் மற்றும் மருத்துவ துறைசார்ந்தவர்கள் திறன்சார் குடிபெயர்வில் வெளிநாடுகளில் சென்று குடியேறிவிட்டு, உள்நாட்டில் ஈழம் வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிய வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் தமது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை மாத்திரம் அனுப்பினால் போதாது, யுத்தத்தினால் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக இங்கு வந்து சேவையாற்ற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே, பட்டப்படிப்பு முடிந்ததும் துறைசார்ந்தவர்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது உள்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
இதற்காக சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

பிரான்ஸ் ஓய்வூதியர்களின் பஸ் விபத்து; 42 பேர் பலி

தென்மேற்கு பிரான்ஸில் இன்று (23) இடம்பெற்ற கோர விபத்தில் இது வரை 42 பேர் பலியாகியுள்ளனர்.
 
ஓய்வூதியம் பெறும் வயதானோர் பயணித்த பஸ் ஒன்றுடன் லொறி ஒன்று மோதியதை அடுத்து இரண்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
 
இதன்போது இரு வாகனங்களும் தீயினால் கருகியதாக, அவசர பணியாளர்கள் மற்றும் அப்பிரதேசத்தில் இருந்தோர் தெரிவித்துள்ளனர்.
 
இதன்போது அதில் பயணித்த 8 பேர் தப்பியுள்ளதாகவும், அதில் 4 பேரின் நிலை மிகவும் மோசமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இடம்பெற்ற கோர விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 1982 இல் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று காருடன் மோதியதில் 44 சிறுவர்கள் உட்பட 53 பேர் இறந்தமை குறிப்பிடத்தக்கது.
 
»»  (மேலும்)

குடியேறிகளுக்கு எதிராக எல்லையை மூட பால்கன் நாடுகள் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் வடக்கு நாடுகள் குடி யேறிகளை ஏற்பதை நிறுத்தாத பட்சத்தில் தமது நாட்டு எல்லைகளை மூடப்போவதாக பல்கேரியா, ருமேனியா மற்றும் செர்பியா ஆகிய பால்கன் நாடு கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
குடியேறிகள் பிரச்சினைக்கு ஐரோப்பிய நாடுக ளுக்கு இடையில் பரந்த தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும் இந்த நாடுகள், ஆயிரக்கணக்கான குடியேறிகளுக்கு தமது நாடுகள் இடைத்தடை வலயமாக மாறுவதை ஏற்க முடியாது என்று எச்சரித்துள்ளன.
பால்கன் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இடையிலான சந்திப்புக்கு முன்னர் பல்கேரியாவில் கடந்த சனியன்று சந்தித்த மேற்படி மூன்று நாடுகளினதும் தலைவர், இந்த எச்சரிக் கையை விடுத்துள்ளனர்.
யுத்தம் மற்றும் வறுமை காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 670,000 குடியேறிகள் ஐரோப்பாவை அடைந் துள்ளனர். இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பா சந்திக்கும் பிக மோசமான அகதி பிரச்சினையாக இது மாறியுள்ளது.
குடியேறிகளின் படையெடுப்பு அதிகரித்ததை அடுத்து ஹங் கேரி தனது செர்பியா மற்றும் குரோஷிய எல்லைகளை மூடியது. ஸ்லோவேனியாவும் தனது எல்லையை மூடப்போவ தாக எச்சரித்துள்ளது. இந்த பிரச்சினை, ஐரோப்பிய நாடுக ளுக்கு இடையிலான சுதந்திர நடமாட்டத்தை உறுதிசெய்யும்ய்ங்கன் முறைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் பொது வான இணக்கம் ஒன்றை எட்டுவதே இதற்கு சிறந்த தீர்வாகும் என்று பல்கேரியா, ருமேனியா மற்றும் செர்பியா கூட்டாக அறிவித்துள்ளன.
ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் ஏனைய நாடுகள் தமது எல்லைகளை மூடிம்பட்சத்தில் நாமும் அதே சந்தர்ப் பத்தில் எமது எல்லைகளை மூடத்தயாராக இருக்கிறோம்" என்று பல்கேரிய பிரதமர் பொய்கோ பொரிசோவ் குறிப் பிட்டுள்ளார்.
»»  (மேலும்)

10/24/2015

நேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மாபியா ஊடகம் "இனியொரு"

முன்னாள் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் கைது தொடர்பாக புகலிட மாபியா ஊடகங்கள் தங்கள் வாய்க்கு வந்தபடி கற்பனை கதைகளை தங்கள்மன விகாரங்களுக்கு வாய்த்தால் போல வெளியிட்டு வருகின்றன.மைத்திரிக்கு தற்கொலை குண்டு தாக்குதல் பிள்ளையான் நிகழ்தினாராம்.என்று எழுதப்படுகின்றது.

கிழக்கு போராளிகள் தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து பிரிந்த போது வெருகல் படுகொலை போன்ற மாபெரும் படுகொலைகளை எதிர் கொள்ள நேரிட்டது.அதன் காரணமான  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தங்கள் பாதுகாப்புக்காக வன்னி புலி பயங்கரவாதிகளுக்கு  எதிராக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. இதுபற்றிய உள்நாட்டு,சர்வதேச மனித உரிமை  அறிக்கைகளில் "தமிழ் மக்கள் விடுதலை புலிகள்" தற்கொலை படைகளை வைத்திருந்தார்கள் என்று ஒருபோதும் பதிவாகவில்லை.ஆனால் அவர்களுக்கெல்லாம் தெரியாத தற்கொலை படையை பிள்ளையான் வைத்திருந்தார் என்று இந்த மாபியா ஊடகங்கள் கதை விடுகின்றன.

அத்தோடு "இனியொரு" என்று வெளிவரும் ஒரு மாபியா ஊடகம்  "தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ரி 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்திக் கொலை செய்யப்பட்டதாகவும், ராஜன் சத்தியமூர்த்தியைப் பாராளுமன்ற உறுப்பினராக்கும் நோக்கத்துடனேயே இக் கொலை நடத்தப்பட்டதாகவும் ஆனல் ராஜன் சத்தியமூர்த்தி  புலிகளால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்".என கோமாளித்தனமான் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.(இந்த பந்தியில் உள்ள தகவல் பிழைகள் மட்டுமல்ல எழுத்து பிழைகளும் அவர்களுக்கே உரியது)


இந்த மாபியா ஊடகம் "இனியொரு"வுக்கு நேற்று நடந்த வரலாறே  தெரியாமல் பினாத்துகிறது.ராஜன் சத்தியமூர்த்தியை எம்பியாக்கவே ஜோசப் பரராசசிங்கம் கொல்லப்பட்டாராம்  ஆகா-----நாட்டில நடக்கின்ற நேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மாபியா ஊடகம் இனியொரு எவ்வளவு புண்ணாக்குத்தனமாக கட்டுரைகளை எழுதுகிறது என்று பாருங்கள். 

மக்களிலும் அரசியலிலும் உண்மையான அக்கறை கொண்ட அனைவருக்கும் இந்த சம்பவங்கள் ஒருபோதும் மனதை விட்டகலாதவை.ஆனால் நாட்டு மக்களில் இருந்து வெகுதூரம் விலகி வெளிநாட்டு அறைகளுக்கும் இருந்துகொன்று கணணி புரட்சிபண்ணும் இனியொரு போன்ற இந்த வேடதாரிகளுக்கு இவையெல்லாம் வெறும் பிழைப்புவாதங்கள் ஆகும். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ராஜன் சத்திய மூர்த்தி கிழக்கு பிளவு அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளேயே அதாவது 2004 மார்ச் மாத இறுதியில் வன்னிபுலிகளால் கொல்லப்பட்டார்.கிங்ஸ்லி இராசநாயகம் 
தேர்தல் முடிந்த பின்னர் வெற்றியீட்டி, அதாவது கிழக்கு பிளவு நடந்து ஆறு மாதங்களுக்கு பிறகு கொல்லப்பட்டார்.ஆனால் ஜோசேப் பரராசசிங்கமோ 2005ஆம் ஆண்டு சுமார் ஒன்றரை வருடங்கள் எம்பியாக இருந்த பின்னனரே அதாவது கொல்லப்பட்டார்.

ஆனால் இனியோருவோ கொல்லப்பட்டு ஒன்றரை வருடங்களாகிபோன இராஜன் சத்திய மூர்த்தியை   எம்பியாக்க பிள்ளையான் ஜோசேப் பரராசசிங்கத்தை கொன்றார் என்று கதையளக்கின்றது. இதிலிருந்து இவர்களின் செய்திகள், கட்டுரைகளின் போலி முகங்கள் இலகுவாக அம்பலமாகி விடுகின்றன.இவர்களை எண்ணி நாம் அனுதாபப்டுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்.

மீன்பாடும் தேனாடான் 

http://inioru.com/mahinda-contracted-pillaiyan-to-kill-maithree/
»»  (மேலும்)

சட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா? கேலிகூத்தாகும் பிரசாந்தன் கைது எழுப்பும் கேள்விகள்.

சட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா?  கேலிகூத்தாகும் பிரசாந்தன் கைது எழுப்பும் கேள்விகள்.


 Afficher l'image d'origineதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று 23/10/2015 காலையில் காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரகாந்தன் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியில் செயலாளரும் போலி குற்றச்சாட்டின் பெயரில் கைதாகியுள்ளார்.

பிரசாந்தன் ஒரு கொலை சம்பவத்துடன் இணைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்றதும்  முன்னாள் போராளிகள்,வன்முறையாளர்கள் என்கின்ற,ஆயுத கலாச்சாரத்தில் வந்தோர் என்கின்ற விம்பங்கள் எழுவது இயல்பு.அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு- ரணில் கூட்டரசாங்கம் தனது பழிவாங்கலை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிமீது மீது  திட்டமிட்ட வகையில் தொடருகின்றது. இதன் காரணமாகவே கட்சியின் தலைவரை தொடர்ந்து செயலாளரும்  கொலைக்குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் கைதாகியுள்ளார்.    

பிரசாந்தன்  தனது மேற்படிப்புடன் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அதிசிறந்த கள செயற்பாட்டாளர்களில் ஒருவராக தேசிய ரீதியில் மதிக்கப்படுபவர்.அவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சட்டரீதியாக பதிசெய்யப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்ட வேளையில்  முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தலுடனேயே அரசியலுக்கு வந்தவர். தனது முதலாவது வரவிலிருந்து கட்சிக்காக அவர் ஆற்றியவரும் நேர்மையான பணிகள் காரணமாக கட்சியில் முதலாவது தேசிய மாநாட்டில் கட்சியின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டவர். வன்முறைகளுக்கும் பிரசாந்தனுக்கும் எள்ளளவும் சம்பந்தமற்றவர்.புலால் உண்பதே பாவம் என்று கருதும் சைவ உணவுக்காரன்.ஆயுதமொன்றை தூக்கிகூட  அறியாத  இந்த பிரசாந்தன் மீது இப்படியாததொரு குற்றச்சாட்டா? இதிலிருந்து முன்னாள் முதலமைச்சரின் கைது தொடக்கம் இந்த கைதுகள் திட்டமிடப்பட்ட கூட்டமைப்பு -ரணில் அரசாங்கத்தினது கூட்டு சதி என்பது புலனாகின்றது.

ஆனாலும் இனி அவரைப்பற்றி புகலிட புலி பினாமிகளின் புலனாய்வு தகவல்கள் சூடு பறக்கும்.
கேப்பிட்டிபோலாவில் கிளைமோர் வைத்தவர்,சுதந்திரதின குண்டுவேடிப்பின் சூத்திரதாரி,மைத்திரியை கொல்ல மையங்கனையில் காத்திருந்தவர்,என்கிற புலி மாபியாக்களின் ஊடகங்கள் ஊளையிடத்தொடங்கும்.

மீன்பாடும் தேனாடான் 

»»  (மேலும்)

10/23/2015

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது--சதி முயற்சியை உறுதிப்படுத்துகின்றது

Afficher l'image d'origineதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று காலையில் காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரகாந்தன் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியில் செயலாளரும் போலி குற்றச்சாட்டின் பெயரில் கைதாகியுள்ளார்.மேற்படி "தொடர் கைதானது அக்கட்சியை பலமிழக்க செய்யும் சதி முயற்சி என்பதனை சந்தேகமின்றி உறுதிப்படுத்துகின்றது" என்பது நிரூபணமாகின்றது.
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முஸ்லிம் காங்கிரசின் வீட்டுச்சொத்தா..?

(சுலைமான் றாபி)

Résultat de recherche d'images pour "கிழக்கு மாகாண ஆளுநர்"ஒரு நாட்டின் மிகப்பெரும் அத்தியாவசியத்தேவைகளில் கல்விக்கு அடுத்த படியாக சுகாதாரம் மிகப்பெரும் பங்கினை வகிக்கின்றது. இதனாலேயே ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்களிடத்தில் இவை இரண்டும் மிக அத்தியாவசிய தேவைகளாக மாறிவிட்டது. இது இவ்வாறு இருக்க நமது நாட்டில் சுகாதார சேவை நாளுக்கு நாள் பல வளர்ச்சிப்படிகளை எட்டிக்கொண்டு வந்தாலும் கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சு அதிகார மோகத்தினால் சுருட்டப்பட்டு எங்கோ ஒரு மூலையில் தூசு படிந்து கிடக்கிறது. உண்மையில் இந்த விடயமானது படித்தவன் முதல் சாதாரண பாமரன் வரை அனைத்து சமூகத்தினராலும் நன்கு உற்று நோக்கப்படுகின்ற மிகப்பெரும் விடயமாக அவதானிக்கப்படுகிறது.

இதில் இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்காக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் தனது பதவியினை இராஜினாமா செய்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் கூட அதிகார மோகம் கொண்டு இந்த அமைச்சு  கிடைத்தால் தனக்குத்தான் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் அது யாரின் கைக்கும் செல்லக் கூடாது என்பதில் இறுமாப்புக் கொள்கையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் குறுகிய மன சிந்தனைகள் இன்னமும் மங்காமல் இருக்கின்றது மனவேதனையளிக்கின்றது.

இந்த விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும் ஏதோ நாதியற்றுக் காணப்படுவதனையும் அவதானிக்க முடிந்துள்ளது. ஏனென்றால் தேர்தலுக்குப் பிறகு இந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு யாரின் கைகளுக்குச்செல்ல வேண்டும், அதன் மூலம் இம்மாகாண மக்களின் பிரச்சினைகள் எவ்வாறு  தீர்க்கப்பட வேண்டும் போன்ற விடயங்களில் அக்கறையில்லாது வெறும் அரசியல் அறிக்கைகளை விட்டு கிழக்கு மாகாணம் ஏதோ ஆசியாவின் ஆச்சரியம் போன்று அவரால் சித்தரிக்கப்படுகிறது.

உண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் இந்த சுகாதார அமைச்சரை நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் போன்றோர்களிடத்தில் இது சம்பந்தமான எந்தவிதமான முன்னேற்பாட்டு  நடவடிக்கைகளையும் எடுத்ததாக அறியக் கிடைக்கவில்லை.

இதுதவிர இந்த சுகாதார அமைச்சர் ஒருவர் இதுவரைக்கும் நியமிக்கப்படாததால் வைத்தியசாலைகளிலும், இன்னும் சுகாதார அமைச்சு சம்பந்தமான ஏனைய திணைக்களங்களில் காணப்படும் குறைகளை நிபர்த்தி செய்யமுடியாமல் அங்கு கடமை புரியும் ஊழியர்களும், அதன் நிர்வாகங்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். உண்மையில் இது கிழக்கு மாகாண முதல்வரின் நிர்வாக கட்டமைப்பிற்குக்  கிடைத்த மிகப்பெரும் சவாலும் இழுக்குமாக உற்று நோக்கப்படுகின்றது.  

இது தவிர சுகாதார அமைச்சரை நியமிக்கும் விடயத்தில் அதன் முதல்வர் ஏன் கரிசனையற்றுக் காணப்படுகின்றார் என கேட்கத்தோணுகிறது. மறு புறம் கிழக்கு மாகாண சபையில் நாளுக்கு நாள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆழும் கட்சிக்கு தாவுவதினால் அங்கு பலமான ஒரு எதிர்க்கட்சி இல்லாத சூழ்நிலை காணப்பட்டாலும் இந்த சுகாதார அமைச்சர் விடயத்திலும் இன்னமும் ஒருத்தரும் குறி வைக்க முடியாமல் திண்டாடுகின்றார்கள் என்பதனை மட்டும் நன்றாக அவதானிக்க முடிந்துள்ளது.

உண்மையில் இது நிச்சயம் வேதனைப்படவேண்டிய ஒரு விடயமாக இருக்கின்றது. ஏன்? அவ்வாறெனில் இந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு முஸ்லிம் காங்கிரசிற்கு மட்டும் சொந்தமானதா? அல்லது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர்தானா சுகாதார அமைச்சராக வர வேண்டும்? இது என்ன அக்கட்சியின் வீட்டுச்சொத்தா? என பல்வேறு கேள்விக் கணைகளை தொடுக்க வேண்டியுள்ளது.

இது தவிர மாகாண சபை அமர்வுகளில் மட்டும் வீராப்புப் பேசும் ஏனைய சபை உறுப்பினர்களும் இந்த அமைச்சு பற்றி தட்டிக் கேட்க திராணியற்றவர்களாக இருக்கின்றார்களா? எனவே இவர்கள் எல்லோரும்  வெறும் ஊடக அரசியல் நடாத்தும் அரசியல்வாதிகளாகவே மக்களால் புடம் போடப்பட்டுள்ளனர். 

இது இவ்வாறு இருக்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை யாருக்கு எப்படி எந்த சந்தர்ப்பத்தில் கொடுக்க வேண்டும் என்று மு.கா தலைவர் மனக்கணக்குப் போட்டு வைத்துள்ளார். ஆனால் அவர் கடைசி நேரத்திலே துரும்புச்சீட்டை இறக்குவார். அது வரைக்கும் முட்டுபவர்கள் முட்டி மோதி, சின்னா பின்னப்பட்டு அவர்களை சீரழிய வைத்து விட்டு பிறகு அவர்களின் வாய்களுக்கு தீனி போடும் பழக்கத்தை தந்துரோபாயமாக கொண்டுள்ள மு.கா தலைவரும் இந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு விடயத்தை பற்றி கவனம் செலுத்தாமையும் பல்வேறு தாக்கங்களை நாளுக்கு நாள் ஏற்படுத்துகிறது.

ஏனென்றால் அன்றாடம் இந்த சுகாதார அமைச்சு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீரிற்கா, தவத்திற்கா, உதுமாலெவ்வைக்காஅல்லது திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரிற்கா என்ற கேள்விகள் நாளுக்கு நாள் மக்களிடத்தில் விரிசலாகிப் போவதை இங்கு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது  மு.கா தலைவர்  வழமையாக மேற்கொள்ளும் ஒருவகை "நரித்தந்திர" அரசியல் என்றும் குறிப்பிடலாம். இது போன்ற ஒரு முறைதான் அண்மையில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயம்...

சரி இது இவ்வாறு இருந்தாலும் இன்னமும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை நியமிக்க முடியாமைக்கான காரணம் என்ன? எனவே இவ்வாறான பதவி மோகங்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை வாட்டிக் கொண்டே போனால் அவர்களின் ஆதரவாளர்களிடத்திலும், அவர்களிடத்திலும் பனிப்போர்கள் உக்கிரம் அடைந்து பிளவுகளை சந்திக்க வேண்டிய தருணம் ஏற்படும். பின்னர் பதவிகளுக்காக பிரிந்து செல்லும் சமூகங்களாக நம்மளை நாம் உருவாக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும். 

இது இவ்வாறு இருக்க அண்மைக்காலமாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லா முஸ்லிம் காங்கிரசில் இணையப்போகின்றார் என்கின்ற கதைகள் வேகமாகப் பரவினாலும் அவரை கட்சிக்குள் கடைசி வரை சேர்க்கக் கூடாது என்பதில் அநேக போராளிகள் அவதானமாக இருக்கின்றார்கள். ஏனென்றால் அதாஉல்லாஹ் கட்சிக்குள் வந்தால் தங்களின் கதை கந்தலாகிவிடும் என்பதில் அவர்கள் ஒவ்வொருத்தரும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.

ஆனால் மு.கா தலைவர் அவர்கள் எப்படியான முடிவுகளை எடுப்பார் என்பது யாருக்கும் தெரியாத ஒரு விடயமாக இருக்கின்றது. ஏனென்றால் கடந்த காலங்களில் மு.காவையும், அதன் தலைமையையும் விமர்சித்து தனிக்கட்சி அமைத்து திரிந்த தற்போதய கிழக்கு முதலமைச்சரையே வளைத்துப்போட்ட மு.கா தலைவரிற்கு அதாஉல்லாஹ்வை வளைத்துப்  போடுவதென்பது ஒரு பெரிய காரியமல்ல.

ஏனென்றால் அமைச்சர் அதாஉல்லாவினால்தான் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய வளர்ச்சியடைந்தது என்று சொன்னால் மிகையில்லை. இந்த  விடயத்தில் புதிதாக  அரசியல் பேசுபவர்கள் சற்று நிதானமாக அறிக்கைகளை விடுவது காலத்தின் தேவையாகும். அதே போன்றுதான் தேசியப்பட்டியல் விடயமும். எனவே இவையெல்லாம் எதிர்கால அரசியல் காய் நகர்த்தல்களாக இருந்தாலும் தற்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டியது அவசியமானதாகும்.

எனவே கிழக்குமாகாண சுகாதார அமைச்சரை பெறும் விடயத்தில் அரசாங்கத்தோடு இணைந்துள்ள அனைத்து கட்சிகளும் விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.


நன்றி Jaffna Muslim

»»  (மேலும்)