இலங்கையில் ஜனநாயக அரசாங்கம் ஆட்சியிலிருக்கும் நிலையிலும் போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒடுக்குமுறை கட்டமைப்புகளை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படாத காரணத்தினாலேயே இந்நிலைமை மீண்டும் அங்கு தொடர்வதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இலங்கை மீதான நிபுணர்கள் குழுவின் முன்னாள் உறுப்பினரும் தென்னாபிரிக்காவின் பிரபல சட்டத்தரணியுமான ஜஸ்மின் சூகா நேற்று முன்தினம் ஜெனீவாவில் கூறியுள்ளார்.