நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் தீப்பிடித்தை அறிந்த விமானி உடனடியாக தில்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியவுடன் விமான நிலையத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் சிலருக்கும் மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விமானத்தில் 130க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த திடீர் தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.