9/07/2015

| |

தொடங்கிட்டாங்கையா தொடங்கிட்டாங்க-----த.தே.கூ குழு ஜெனிவாவுக்கு பயணம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாதம் ஜெனிவாவுக்கு பயணமாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அதிகாரிகள் மற்றும் சர்வதேச சமூகத்தை சந்தித்து சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவை பெறுவதற்கும் கலந்துரையாடலொன்றை முன்னெடுப்பதற்குமாகவே குறித்த பிரதிநிதிகள் குழு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவாவில் இடம்பெறவுள்ள 30ஆவது யு.என்.எச்.சி.ஆர். கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய அறிக்கை மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரால் வெளியிடப்படுவதுக்கு முன் இவ்விஜயம் இடம்பெறவுள்ளது. இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட மோதல்களின்போது முன்னாள் அரசாங்கத்தினாலும், விடுதலைப்புலிகளாலும் பாரியாளவு மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியிடப்படவுள்ள அறிக்கையானது சாடவுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கபடுவதற்கு முன், தாங்கள் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களோடும், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அலுவலகத்துடனும் பேச்சுக்களை நடத்தி எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவுள்ளதாவும், தாங்கள் எந்த உள்ளக விசாரணையை நிராகரிப்பதாகவும், போர்க்குற்றங்கள், சுயாதீனமான வெளிநாட்டு அணியினராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.