ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர வீர முன்வைத்திருக்கும் யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிவில் சமூகமும் பாராட்டியுள்ளன. ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, புதிய அரசியலமைப்பை உள்ளீர்த்துக் கொள்வது தொடர்பாகவும் உண்மை ஆணைக்குழுவை அமைப்பது பற்றியும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஏனைய விடயங்கள் குறித்தும் யோசனைகளைத் தெரிவித்திருந்தார். ”முன்னைய ஆட்சியாளர்களிலும் பார்க்க இந்த விவகாரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறுபட்டதாக இருக்கின்றது. சரியான நிலைப்பாட்டை அரசாங்கம் உள்ளீர்த்திருக்கின்றது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் "இந்து' பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார். -