9/05/2015

| |

எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தேசிய, சர்வதேச ரீதியில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் - அநுரகுமார திஸாநாயக்க

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவே ஆர்.சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் வanurakumaraழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் மூன்றாவது பெரும்பான்மை கொண்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதாக கூறிய அவர், அதன்படி முதல் இரண்டு பெரும்பான்மை பெற்றுள்ள ஐதேக, ஐமசுமு இணைந்து ஆட்சி அமைப்பதால் பாராளுமன்ற சம்பிரதாயத்தின்படி எதிர்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரியது என அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.  எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் இருந்து தேசிய, சர்வதேச ரீதியில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். ஆர்.சம்பந்தனை நியமித்தது ஆபத்து என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்றும் அப்படி செய்தால் எதிர்கட்சித் தலைவர் பதவியை அவர்கள் பெற முடியும் என அவர் கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அநுர தெரிவித்தார். எனவே கடத்தல்காரர்களுக்கு பயந்தோ அல்லது கடத்தல்காரர்களை உருவாக்கும் அரசியல் அமைப்பு மக்கள் விடுதலை முன்னணி அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.