பௌர்ணமி தினமான ஞாயிற்றுக்கிழமை (27) பூரண சந்திரகிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 17 மாத காலப்பகுதி இடம்பெறும் நான்காவது நிகழ்வு இது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திரக்கிரகணத்தை, பூமியின் மேற்கத்தேய அரைக்கோளத்திலுள்ள 1 பில்லியன் மக்களுக்கும் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிலுள்ள சுமார் 1.5 பில்லியன் மக்களுக்கும், மேற்கு ஆசியாவிலுள்ள 500 மில்லியன் மக்களுக்கும் காணக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திரக்கிரணகம் காரணமாக, பௌர்ணமி தினத்தன்று மாலை சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு ஞாயிறு ரெட் மூன் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.