கடந்த காலங்களில் பொய்களையும் புரட்டுகளையும் மூலதனமாக கொண்டும் மக்களின் மரணங்களை விற்றும் பிழைப்பு நடாத்திய லங்காசிறி இப்போது கிழக்கில் நேரடியாக களமிறங்குகின்றது.
லங்காசிறி கிழக்கு பிரிவின் போது படுகொலைகளை ஊக்குவித்து செய்திகள் வெளியிட்டதில் முன்னணி வகித்தது.
2004 ஆம் ஆண்டு கிழக்கு பிளவு நடந்த போது ஜனநாயக பாதைக்கு திரும்பிய 210கிழக்கு போராளிகள் படுகொலை செய்யப்படவும் அவர்களில் பல பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டு நிர்வாணமாகாகப்பட்டு கொன்று வீச படவும் காரணமாக இருந்த வெருகல் படுகொலை நிகழ்ந்தபோது "கத்தியின்றி இரத்தமின்றி தேசிய தலைவர் கிழக்கை மீட்டார்" என்று பிணவாடைகளின் மீது வெற்றி களிப்பை கொண்டாடி செய்தி வெளியிட்டது.
மட்டக்களப்பின் தமிழ் புத்திஜீவிகளான சத்தியமூர்த்தியும் கிங்ஸ்லி இராசநாயகமும் தில்லை நாதனும் கொன்று வீசப்படும் போது துரோகிகள் ஒழிந்தார்கள் என்று சங்கநாதம் எழுப்பியது இந்த லங்கா சிறிதான் அகோர சுனாமிக்கு நிகராக படுகொலைகளை உருவாக்குவதில் முன்னணி வகித்ததமிழ் இணையத்தளங்களில் முதன்மையானதாகும்.இது இப்போது முதன் முறையாக மட்டகளப்பில் அலுவலகத்தை முதன் முறையாக திறந்துள்ளது. இத்தோடு ஐயகோ அழிந்தது எஞ்சிக்கிடக்கும் தமிழினமும்.