அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்புக்கள் கிடைப்பதில்லை. இதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்ற போது அந்தந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு என்னைப்போன்ற ஏனைய ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களை அழைக்க வேண்டாமென முதலமைச்சர் உத்தரவிடுவதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான முதலமைச்சரின் செயற்பாடுகளை தான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.