9/24/2015

| |

மக்காவில் 310பேர் பலி; 450பேர் படுகாயம்

வருடாந்த ஹஜ் யாத்திரையின் போது, புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளதாகவும் 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சவூதி அரேபிய சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 1 மில்லியன் மக்கள் இன்று மக்காவுக்கு சென்றிருந்ததாகவும் சனநெரிசலில் நசுங்குண்டே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புனித மக்கா பள்ளிவாசலிலிருந்து 5 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள மினாவில் நடந்த இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டடோரை மீட்கும் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.