9/07/2015

| |

8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள்

Image pour le résultat associé aux actualitésகடந்த ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற 8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களாக கட்சிகளின் பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள உறுப்பினர்கள் நியமிக்கப்படலாமென கிழக்கு மாகாண சபையின் பேரவை செயலாளர் எம்.சீ.எம்.சரீப் தெரிவித்தார்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட அலிசாஹிர் மௌலானாவின் இடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் வெற்றி பெற்ற தயா கமகேயின் இடத்திற்கு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள கே.சில்வாவும் ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பில் வெற்றி பெற்ற விமலவீர திசாநாயக்காவின் இடத்திற்கு எஸ்.தேவாரப்பெருமவும் நியமிக்கப்படவுள்ளனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டடிலில் வெற்றீட்டிய மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரின் இடத்திற்கு எம்.ஐ.எம்.மாஹிரும் நியமிக்கப்படவுள்ளனர்.

திருமலை மாவட்டத்தில் ஐக்கியதேசிய கட்சி சார்பில் வெற்றிபெற்ற இம்ரான் மஹ்ரூபின் இடத்திற்கு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ளவர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் அவரும் பாராளுமன்றதிற்கு தெரிவாகியுள்ளதால் அதற்கு அடுத்த நிலையிலுள்ள எம்.அருண நியமிகப்படுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.குறித்த கட்சிகளின் செயலாளர்களினாலேயே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இன்னும் ஒருமாத காலத்தினுள் இந்த நியமனங்கள் பூர்த்தியடைந்து விடுமென செயலாளர் மேலும் தெரிவித்தார்.